வாணிபம் -வணிகம் -வெளிநாட்டு வாணிபம் - சங்க கால வாணிபம்

 

வாணிபம் - வெளிநாட்டு வாணிபம் - சங்க கால 

                வாணிபம் 

தமிழர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே 

வாணிபத்தில் ஈடுபட்டனர்.

கிரீஸ் ரோம் எகிப்து முதல் கிழக்கில்  சீனம் வரையிலும் அவர்கள் கடல் 

வாணிபத்  தொடர்பு கொண்டிருந்தனர்.

எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் ஆகிய 

நாடுகள் தமிழரின் பொருட்களை விரும்பி வரவேற்றனர்.

ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் மேற்காசிய நாடுகளில் நல்ல 

விலைக்கு விற்கப்பட்ட தமிழக பொருட்களாகும்.

யூதர்கள்:

யூதர்களின் தலைவரான மோசஸ் என்பவர் தாம் நடத்திய 

இறைவழிபாட்டில் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஏலக்காயை 

பயன்படுத்தியதற்கான சான்றுகள் நமக்கு கிடைக்கின்றன.

இது கிமு 1490 இல் நடைபெற்றது ஆகும்.

சாலமனின் காலத்தில் பொன்னும் வெள்ளியும் தந்தமும் குரங்கும் மயில் 

தோகையும் அகில் மரங்களும் ரத்தினங்களும் கப்பல்களில் ஏற்றிச் 

செல்லப்பட்டன.

இப்பொருள்கள் எல்லாம் சேர நாட்டில் இருந்து கொண்டு 

செல்லப்பட்டதாகும்.

எகிப்து:

எகிப்துடனான வாணிகம் பற்றி  பெரிப்லூசு எனும் நூலை பதிப்பித்த 

வில்லியம் எச் ஸ்காப்  என்பவர் கூறுகிறார்.

கிரேக்க மக்கள் அநாகரிகத்திலிருந்து  விழித்தெழுவதற்கு பல்லாயிரம் 

ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தும் பண்டைய இந்திய நாடுகளும் வாணிக 

தொடர்புகள் கொண்டிருந்தன என்று கூறுகின்றார் வில்லியம் எச் ஸ்காப்  .

பாபிலோனியா:

தமிழர்கள் பாபிலோனியர்களுடன் நிகழ்த்திய வாணிபம் பற்றிய சான்றுகள் 

நமக்குக்  கிடைத்துள்ளன .

நிப்பூர் எனும் இடத்தில் முரஷூ  என்பவரும் அவர் மக்களும் காசு 

வணிகம் நடத்தினர்.  அவர்கள்  களிமண் ஏட்டில் கணக்குகளை 

பதிந்துள்ளனர்.  

இதில்  அங்கு  வாழ்ந்த தமிழக வணிகர்களுடன் நடத்திய வணிகத்தின் 

பற்று வரவுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.  

தமிழர்களுக்கும் சுமேரியாயாவுக்கும் நடந்த வாணிபம். கி.மு 4000 

ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த வாணிகம் நடைபெற்று வந்தது சேஸ் 

என்பவர் குறிப்பிட்டுள்ளார் .

சுமேரிய மன்னரின் தலைநகரம் ஊர்.  அங்கேயுள்ள சந்திரன் கோயிலின் 

சிதைவுகளில் சேர நாட்டு தேக்கு மரத்  துண்டுகள் கிடைத்துள்ளன.  

இவ்வூர்  3000த்திலேயே அழிந்துவிட்டமையால் இம்மரத்துண்டு 5000 

ஆண்டுகளுக்கு முற்பட்டது  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

பாபிலோனியா

சிந்து  எனும் சொல் துணியை குறிக்கும்.

பாபிலோனியா நாட்டுப் பொருள்களின் பட்டியல் ஒன்றில் சிந்து என்ற 

சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுவும் தமிழகத்திலிருந்து சென்றிருக்க வேண்டும்.

அரேபிய கிரேக்க கப்பல்கள் முசிறியில் நிறைந்து இருந்ததாக

பெரிபுலூசு என்னும் நூல் குறிப்பிடுகிறது.

இப்பாலசு( ஹிப்பாலஸ்)  எனும் கிரேக்க அறிஞர் முதன் முதலில் 

தென்மேற்கு பருவக்காற்றின் தன்மையை கண்டறிந்தார்.

இதனால்  கடல் வாணிகம் சிறப்படைந்தது.

ரோமர்களின் வாணிகம் வளர்ச்சியுற்ற போது தான் பாண்டிச்சேரிக்கு 

அருகே ஒரு பண்டகசாலையும் விற்பனைச் சாலையும் ஏற்படுத்தப்பட்டன.

அங்கே சாயத் தொட்டிகள் காசுகள், மட்பாண்ட ஓடுகள், கண்ணாடி 

மதுச்சாடி  ஆகியவை கிடைத்துள்ளன.

இங்கிருந்து புலி, சிறுத்தை, யானை,குரங்கு, மயில், கிளி, பாம்புகள் 

ஆகியவை ஏற்றுமதி ஆகின.

ஸ்டராப்போ  எகிப்தில் ஒன்பது அடி  நீளமுள்ள நல்ல பாம்பை 

கண்டுள்ளார் .

இலவங்கம், மிளகு, இஞ்சி,ஏலம்,அரிசி, கலிங்கம், தேக்கு, கருங்காலி 

சந்தனம் ஆகியவையும் ஏற்றுமதி ஆயின.

கிமு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிப்போகிரேட்டஸ்   என்பவர் 

மிளகை இந்திய மருந்து என்றார்.

 சீனா

கீழே நாடுகளான சீனத்தோடும் மலேசியாவோடும் சாவகத்தோடும் 

வடபோர்னியாவோடும் தமிழர்கள் பன்னெடுங்காலமாக வாணிபம் செய்து 

வந்துள்ளனர்.

சீனத்துப்பட்டும் சர்க்கரையும் இங்கே வந்தன.  

சீனி, சீனம் எனும் சொற்கள் சர்க்கரையையும் பட்டையும் குறிக்கும். 

சீனக்கண்ணாடி, சீனக் கற்பூரம், சீன கருவா, சீனக்  களிமண், சீனக் 

காக்கை, சீன காரம் சீனக் கிழங்கு, சீனக்  கிளி, சீனக்  குடை போன்ற 

சொற்கள் சீனத்தில் இருந்து இங்கே வந்த பொருட்களைக் குறித்து  

தமிழில் வழங்கப்பட்டவை ஆகும்.

பிலிப்பைன் தீவுகள்

தமிழர்கள் பயன்படுத்திய கோடாரிகள் ,கத்திகள், ஈட்டிகள் போன்றவை 

பிலிப்பைன் தீவுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மேலைநாட்டுடன் 

நடத்திய வாணிகம் குறைந்த  பிறகு தமிழர் கீழை நாட்டுடன்  வாணிபத் 

தொடர்பை வளர்த்து வந்தனர்.  

தமிழ்நாட்டில் பிற நாட்டார் மனம் கவர்ந்த  பொருட்களாக  முத்தும்  

பவளமும் ஆரமும் அகிலும் வெண்துகிலும் சங்கும் மிளகும் குறிப்பிடலாம்.

இதனால் பெரிய மரக்கலங்களில் தமிழகம் வந்து ரோமர்களும் 

அரேபியர்களும் பொன்னொடு வந்து பொன்னிற்குப்   பதிலாக மிளகாய் 

பெற்றுச் சென்ற செய்தி நம்மிடம் காணப்படுகிறது.  

குதிரைகள் பிற நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி 

செய்யப்பட்டுள்ளன.

நீரிலிருந்து நிலத்தில் பொருட்களை இறக்குவதும் நிலத்திலிருந்து 

கப்பல்களில் ஏற்றுவதுமாகிய மிகப்பெரிய வாணிபம் 

காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்றதை அறிய முடியும்.

காற்றின் துணை கொண்டு கப்பலால் வாணிபம் நடத்தப்பட்டது.   

அவை பாய்மரக் கப்பல்களாகவே இருந்திருக்கின்றன.

இந்த பாய்மரக் கப்பல்களை செலுத்துவதற்கு காற்று எந்தெந்த திசையில் 

எப்பொழுது வீசும் என்று உணர்வு அடிப்படையாகும்.

தமிழர்கள் இதை நன்கு உணர்ந்து காற்றடிக்கும் திசையை கணித்து அதன் 

மூலமே இந்த கடல் வாணிபத்தை மேற்கொண்டுள்ளனர்.

துறைமுகப்பட்டினங்கள்

துறைமுக பட்டினங்களில் பண்டகசாலைகள் இருந்தன.  

அச்சாலைகளில் இருந்து இறக்குமதி பொருள்கள் மீதும் ஏற்றுமதி 

பொருள்கள் மீதும் அரசு அதிகாரிகளின் முத்திரைகள் இடப்பட்டன. 

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு 

ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டு இருந்ததாகவும் அதன் மேல் 

நாய்களும் ஆட்டுக்கிடாய்களும் ஏறி குதித்து விளையாடிய செய்திகள் 

காணக் கிடைக்கின்றன.

உப்பங்கழிகளில் செலுத்துவதற்குரிய சிறிய படகுகளும்  கடலில் 

செலுத்துவதற்குரிய பெரிய கப்பல்களும் அன்று பயன்படுத்தப்பட்டன. 

உள்நாட்டில் பயன்படுத்தப்பட்ட படகிற்கு பெயர் பஹ்ரி என்பதாகும்.  

பெரிய கப்பல் நாவாய் எனப்படும் நாவாய்களை வங்கம் என்று கூறுவர் 

இவ்வங்கம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் பல நூல்களில் 

காணக் கிடைக்கின்றன.

தொண்டை நாடு என்னும் நாட்டில் உள்ள நீர் பெயர்ச்சி துறையில் 

வெள்ளிய தலையாட்டத்தை உடைய குதிரைகளும் வடநாட்டு 

பொருள்களும் நமக்கு வந்து இறங்கிய செய்தியும் காணப்படுகிறது.  

கலங்கரை விளக்கங்கள்

கடலில் வாணிபத்திற்காக செல்லும் மரக்கலங்கள் வழி தவறி சென்று 

விடாமல் இருக்க துறைமுகத்திற்கு சரியாக வருவதற்கு உதவியாக 

கலங்கரை விளக்கங்களும் அந்த காலத்தில் இருந்தன.  

காவிரிப்பூவும் பட்டினத்தில் பிற துறைமுகங்களிலும் யவனர்கள் போன்ற 

பிற நாட்டவர்களும் வாழ்வதற்கு தகுந்த சேரி ஒன்று இருந்ததாக 

செய்திகள் காணப்படுகின்றன.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதியான பொருள்களில் மிளகு போல் சிறந்து 

விளங்கியது முத்து.

கிரேக்கர்கள் தமிழகத்தை முத்தினைப்  பெறும் இடமாகவே கருதினர்.

ரோமாபுரி மகளிர் முத்தினை  ஆடைகளிலும் செருப்பிலும் வைத்து 

தைத்துக்  கொண்டனர்.

பவளம் சோழமண்டரக் கடற்கரையில் நிரவிய விளைந்தது எனினும் இது 

ஏற்றுமதி செய்யப்படவில்லை.  

பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் 

உயர்வகை மதுவும் ஒன்று.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்