முச்சங்கங்கள்-முதற் சங்கம் – இடைச் சங்கம் - கடைச் சங்கம்
முச்சங்கங்கள்-முதற்
சங்கம் – இடைச் சங்கம் -கடைச் சங்கம்
சங்கம்
தமிழ்ப் புலவர்கள்
கூடி தலை, இடை, கடை என மூன்று சங்கங்கள் கூட்டி அவற்றில் அமர்ந்து தமிழ்
வளர்த்தார்கள்.
கடைச்சங்க
காலத்தில் எழுந்தவையே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள்.
பொதுவாகச் சங்கம்
என்னும் சொல்லானது கடைச்சங்கத்தையே குறித்து நிற்கும்.
சங்கம்
- தமிழ்ச் சொற்கள்
சங்கம் என்ற சொல்
பிற்கால ஒன்றாக இருக்க வேண்டும்.
இதற்கு நேரான
தமிழ்ச் சொற்கள் உண்டு.
கூடல்,
அவை, மன்றம் ஆகியவை சங்கத்தைக்
குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும்.
கூடல் அல்லது
தமிழ்ச் சங்கம் வளர்ந்த இடமாகக் கருதப்படும் மதுரையானது 'கூடல்' என்றே
அழைக்கப்பட்டது.
சமணரும் பௌத்தரும்
தத்தம் சமயங்களை வளர்ப்பதற்குச் சங்கங்கள் நிறுவினர்.
இறையனார்
களவியல் உரை
தமிழ்ச் சங்கத்தைப்
பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல் உரையில்தான் முதன் முதலாகக் காணப்படுகின்றன.
தலை, இடை, கடைச்
சங்கங்களின் வரலாற்றை இது சுருக்கிக் கூறுகின்றது.
மூன்று சங்கங்கள்
மதுரையில் இருந்தன என்பதைப் பல்வேறு இலக்கியங்களும் ஆசிரியர்களும்
ஒப்புக்கொள்கின்றனர்.
முதற் சங்கமும் கடக்கோளும்
பாண்டிய மன்னர்கள் தொடக்கக் காலத்தில் கடல்கொண்ட
தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
அங்கு, தமிழ்ச் சான்றோர்களைக் கொண்டு தமிழ் வளர்க்கும் பணியும் ,
செய்யுள் இயற்றும் செயலும் நடைபெற்றன.
அதுவே முதற் சங்கம் எனப்பட்டது.
இச்சங்கத்தை
நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான்.
காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன்
ஈறாக
89அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை
நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது.
இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த
முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள்
இருந்து தமிழ்
ஆராய்ந்தனர்.
4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல்,
முதுநாரை,
முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள்
பாடப்பட்டன.
இடைச் சங்கம்
அதன் பின்னர் கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு
பாண்டியர்கள் ஆண்டார்கள்.
அங்கேயும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும்
தமிழினை வளர்த்து எடுத்தனர் .
இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது.
கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம்
நடைபெற்றது.
வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற
இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது.
இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார்
வெள்ளூர்க் காப்பியனார் போன்ற3700 புலவர்கள் பாடினர்.
இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை
அகவல் போன்ற நூல்களாகும்.
கடைச்சங்கம்
கபாடபுரமும் கடலால் அழிவுற்ற பிறகு இன்றைய மதுரைக்குப் பாண்டியர்
தலைநகரை மாற்றினர்.
இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்று கி.பி.200
வரை
நடைபெற்றது.
இது கடைச்சங்கம் என்று
அழைக்கப்பட்டது.
கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச்
சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது.
இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து
பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது.
இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49
அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது.
இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார்,
பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்,
மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449
புலவர்கள்
பாடினர்.
இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை,
புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை,
பரிபாடல் போன்றவை ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக