சங்க கால ஆட்சி முறை

                  சங்க கால ஆட்சி முறை

மூவேந்தர்கள் எப்போது தோன்றினார்கள் என்று கூறுவது கடினம்.

ஆனால் அவர்கள் பழமையான அரச மரபைச் சேர்ந்தவர்கள் என்று

மட்டுமே கூற இயலும்.

வால்மீகி  ராமாயணம், மகாபாரதம்,அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டு

ஆகியவை இவர்களைப் பற்றி குறிப்பிடுவதால் இவர்கள் கிறிஸ்துவுக்கு

பன்னெடுங்காலத்திற்கு  முற்பட்டவர்கள் என்று நம்மால் யூகிக்க முடியும்.

தமிழில் கோன், கோ எனும் சொற்கள் அரசனைக் குறிப்பன.

இச்சொற்கள் ஆயர்களைச்  சுட்டும்.

அரசன் தன் காவல் சின்னமாக செங்கோலைத்  தாங்கி வந்திருக்கிறான்.  

ஆயன்  கையில் கோலை வைத்துள்ளான் எனவே முல்லை நிலத்தில்  

தான் முதலில் அரசும் முறை தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்

பி தி  சீனிவாச ஐயங்கார் அவர்கள் தமிழர் வரலாறு என்னும் நூலில்  

குறித்துள்ளார் .

மற்ற அறிஞர்கள், நிரை கவர்தல் மீட்டல் போரில் வெற்றி பெற்ற

கூட்டத்தின் தலைவன் கோன் ஆகியிருப்பான்.

அவனை அமைதி காலத்திலும் கூட்டத்தின் தலைவனாக இருப்பான்

எனவே கோன்மை நிறுவப்பட்டிருக்கும் என்று கூறுவார் .

இப்படிக் கூறுவது சரியானதா என்பது அறிய முடியவில்லை ஏனெனில்

முல்லை நிலத்தில் தலைவன் தோன்றியிருப்பான் என்றால் மற்ற

திணைகளிலும் இவ்வாறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதும் ஆராய

வேண்டிய ஒன்றாகும்.

அடையாளச் சின்னங்கள்:

மூவேந்தர்களுக்கு உரிய அடையாளச் சின்னங்களாக  போந்தை வேம்பு

ஆர் எனும் மூன்றும் தொல்காப்பியர் கூறுகின்றார்.

பண்டையர்  என்ற சொல் பாண்டியர்களைக் குறிக்கும். எனவே

பாண்டியர்களே பழமையானவர்கள் என்பர்.

அர்த்தசாஸ்திரம் ராமாயணம் போன்ற நூல்களில் பாண்டியர்கள்

சுட்டப்படுகின்றனர் . அதனால் அவர்களே பழமையானவர்கள் என்றும்

குறிப்பிடுவர்.

சேர சோழ பாண்டியர் என்றே தொன்று தொட்டு இன்று வரை வழக்கில்

இருந்து வருகிறது.  

புறநானூற்றில் கூட பாடல்கள் சேர சோழ பாண்டியர் வரிசையிலேயே

வைக்கப்பட்டுள்ளன .

சேரர்கள் :

சேரர்களை வானவர் வில்லவர் குடவர் குட்டுவர்  மலையர் என பலவாறு

குறிப்பர்.

சோழர்:

சோழர்களை சென்னி, செம்பியன், வளவன், கிள்ளி  எனக் குறிப்பர்.  

பாண்டியர்கள்:

பாண்டியர்களை மீனவர், பஞ்சவர், தென்னவர், செழியர், மாறர், வழுதி

எனக் குறிப்பர்.

பொதுவாகக் கோ மன்னன் வேந்தன் கொற்றவன் எனும் சொற்கள்

அரசனை குறிக்க பயன்பட்ட சொற்களாகும்.  

அரசாட்சி:

தந்தைக்கு பின்னர் மகன் பட்டம் பெறுவது அன்றைய மரபு.

அரசு கட்டில் முறை முதல் கட்டில் எனப்பட்டது.  

அரசுக்கு உரியவன் கோமகன் ஆவான்.

இளையவர்களைக்  இளங்கோ , இளஞ்சேரல், இளஞ்செழியன், இளம்

வெற்றி கோன், இளம் கோசர் எனும் வழக்கைக்  கொண்டு அழைப்பர்.  

மன்னன் ஆட்சிக்காலம்

மன்னன் இந்த வயதில் தான் முடி சூட வேண்டும் என்ற வரையறைகள்

ஏதுமில்லை . ஆனால் ஒரு மன்னனின் ஆட்சிக்காலம் என்பது அவன்

அறியணையில் ஏறியதில் இருந்து அவன் ஆயுள் உள்ளவரை அவனுடைய

ஆட்சியைக் குறிக்கும்.  

மண்ணு மங்கலம்

மன்னன் முடி சூட்டு விழாவினை ஆண்டுதோறும் கொண்டாடினர்.  

அவ்விழா மண்ணு மங்கலம் எனப்பட்டது.

நாள் மங்கலம்

பிறந்தநாள் விழா நாள் மங்கலம் எனப்பட்டது.

மன்னனின் அவை

மன்னனின் அவை நாளோலக்கம் என்றும்  அரசவை வேட்டவை என்றும்

நான் மகிழ் இருக்கை  என்றும் குறிப்பிடப்பட்டது.  பெருநாள் இருக்கை  

என்று அரசவையை சிலப்பதிகாரம் கூறுகின்றது . அவையில் இசை

நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  அரசனுக்குரிய

அவையில் இருக்க வேண்டிய பண்புகள் எட்டாகக்  கூறுவர்.  அவை

நற்குடி பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலை,

அழுக்காறாமை, தன்னலமின்மை என்பனவாகும்.  

மன்னர்களுக்கு உரியவை

படைக்கலம், கொடி, குடை,, முரசு, புரவி, களிறு, தேர்,மாலை, முடி

ஆகியவை அரசர் கூறிய சின்னங்களாக தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  

கோல்  என்பது செங்கோல் என்றும் குடை என்பது வெண்கொற்றக்

குடையும் குறித்தது என்றும் கூறலாம் .

முரசு

முரசு புனிதமானதாக கருதப்பட்டது அது அழகிய கட்டில் வைக்கப்பட்டது.  

முரசுக்கு குருதி பலியிடுவதும் உண்டு எண்ணெய் பூசி கழுவி

மயிற்பீலியும் மாலையும் சூட்டி அதனை பாதுகாப்பார்கள்.  

அது வைக்கப்படும் கட்டிலில் யாரும் அமர்ந்தால் குற்றமாக கருதப்பட்டது.  

ஆனால் முரசு கட்டில் தூங்கிய முதல் புலவராக மோசிகீரனாரை கூறுவர்.  

முரசை ஏம முரசு என்றும் கூறுவர் .

வாள் மன்னனின் வீரத்தின் சின்னமாகும்.  

மன்னனை வாள் ஏறு  உழவன் என்று பாராட்டுவர்.

நல்ல நாளில் வாளை  எடுத்துச் செல்ல வேண்டிய திசையில் செலுத்தும்

நிகழ்ச்சியை வாள் நாட் கோள் என்பர்.  

கொடி:

கொடி வெல் கொடி என்பர்.  

பெரிய யானையின் மேல் கொடி எடுத்துச் செல்லப்படும்.  

நெடுநல்வாடையில் வென்றெழு கொடி பற்றி பேசப்படுகிறது.

அடையாளம் பூ  :

 மன்னரகள் ஆளுக்கு ஒரு மாலையை அடையாளமாக அணிந்தனர். .

 போரின் போதும் மாலையை அணிந்து கொண்டனர்.  தங்கள் குடிகளுக்கு

 சில பட்டங்களை வழங்கினர்.  

 ஏனாதி பட்டம் தானை  தலைவர்களுக்கும்  வணிகர்களுக்கு எட்டிப்

 பட்டமும் சூட்டினார்.

அவர்களுக்கு எட்டிப் பூவும் வழங்குவர் . காவிதி  பட்டம் வேளாளர்களுக்கு

வழங்கப்பட்டது.  காவிதி  பட்டம் பெற்றோருக்கு மன்னர் அறிவுரை

வழங்குவார்.

அமைச்சர்களுக்கும் ஏனாதி பட்டம் கொடுக்கப்பட்டது.  ஏனாதி பாடி எனும்

குடியிருக்கும் பகுதி  இருந்தது.

காவல் மரம் மன்னர்கள் தங்கள் குடிகளைக்  காப்பாற்றுவதற்காக என்று

கருதி சில மரங்களை பேணிக்காத்தனர் . அவை காவல் மரம் எனப்படும்

அதனை கடி மரம் எனவும் அழைப்பர்.

பகையரசர்கள் தம் யானையை அதில் கட்டினால் அது அவர்களை இழிவு

செய்வதாகும்.  

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

 சிலம்பு ,மணிமேகலை, மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் ஐம்பெரும்  

குழுவும் எண்பேராயமும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.  

தொல்காப்பியத்திலும் பிற நூல்களிலும் திருக்குறளிலும் இவை

இடம்பெறவில்லை.

இவர்களின் கடமைகள் அதில் உள்ளவர்களின் பெயர்கள் ஆகியவற்றை

பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

மதுரைக்காஞ்சியில் நாற்பெரும் குழு என்பது பற்றியும் பேசப்பட்டுள்ளது.  

அதில் அமைச்சர், புரோகிதர், சேனாபதி, தூதர், ஆகியோர் இருந்திருக்கலாம்

என்கின்றனர்.

எண்பேராயத்தை கரணத்தியல்வர், கருமகாரர், கனகசுற்றம்,

கடைக்காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை  

மறவர் என்பவர் இருந்தனர் என்று கூறுகின்றது.

 கிராம ஆட்சி நகராட்சி:

 மன்னனுக்கு அளவுக்கு மிஞ்சிய அதிகாரம் இருந்திருக்கின்றது.

 மன்றம் பொதியில் அம்பலம் என்பவை ஊர்களில் இருந்து.  

 அவை அக்காலத்தில் மண்டல பிரிவு இருந்தது மண்டலமாக்கள் பற்றி   

 சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

 தொண்டை மண்டலமும் கொங்கு மண்டலமும் பிற்காலத்தில்  

 ஏற்படுத்தப்பட்டன.

 புகார், மதுரை, வஞ்சிக்கோட்டை முதலியவை பெரிய நகர்களாக  

 இருந்தன.

 நகராட்சி, மக்கள் தொகை பற்றி குறிப்புகள் இல்லை.

 பெரிய சாலைகள் மிகுதியாக இருந்திருக்கவில்லை.

 பெரு நகரங்கள் நெடுஞ்சாலைகள் இணைத்தனர்.

 எயினர் கள்வர் தொல்லைகள் இருந்தன.

 வழிகளில் வரி வாங்குவோர் இருந்தனர்.

 இவர்களுக்கு பாதுகாப்பாக வெல்வீரர்களும் கூடுகின்றனர் ஊர்காவலர்கள்

 உறக்கமின்றி காவல் செய்தனர் அவர்கள் கையில் விளக்கு இருந்தது.  

 வில்லும் அம்பும் கொண்டு இருந்தனர்.

 ஊரில் பொதுவான கிணறுகள் இருந்துள்ளன.

 குடிநீர் குளங்களும் இருந்துள்ளன.

 மூவேந்தர்களுக்குள் ஏற்பட்ட போர் :

சேர சோழ பாண்டியர்கள் எனும் மூவேந்தர்களுக்குள்ளும்  போர்

ஏற்பட்டுள்ளது.

ஒருவரை ஒருவர் அடுத்தலும் தொடுதலும் நடைபெற்றுள்ளது .

இவ்வாறு அவர்களுக்குள்ள அமைதியை நிலைநாட்ட புலவர்கள் தூது

சென்ற செய்தியும் காணப்படுகிறது.

இவ்வாறு சென்றதனால் புலவர் ஒருவரை  (கோவூர் கிழார்) அரசியல்

புலவர் என்று அழைக்கப்பட்டார்.  

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்