பழைய கற்காலம் – பழங்கற்காலம்
பழைய
கற்காலம் – பழங்கற்காலம்
தொல்
பழங்காலத்தில் உணவைத் தேடி அலைந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும்,
அதனை உண்பதற்காகவும் கல்லால் ஆன கருவிகளைத் உருவாக்கிப்
பயன்படுத்திய காலமே பழைய கற்காலம்.
கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு
முந்திய காலப் பகுதியையே பழைய கற்காலம் என்று அழைக்கின்றனர் .
பழைய கற்காலம் என ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய காலக்கட்டத்தைக்
குறிப்பிடுவர் .
பழங்கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள்
செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லாவரத்திற்கு அருகில் கற்களால் ஆன கோடரிகள், உளிகள், கத்திகள் ஆகிய கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன
.
இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன.
கல்லால் ஆன
கருவிகள் மட்டும் இன்றி மரத்தாலான
ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் பயன்படுத்தியதும் தெரிய வருகிறது.
தமிழகத்தில் வட ஆர்க்காடு மாவட்டத்திலும், பழங்கற்காலக்
கருவிகள் கிடைத்துள்ளன. இதன் வாயிலாக பழங்கற்கால
மக்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது .
இப் பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்ததாகச் சான்றுகள் நமக்குக்
கிடைக்கவில்லை .
முதலில் புரூஸ்புட் என்ற நிலவியல் ஆய்வாளர் 1863ல் சென்னையில் பல்லாவரம் அருகே சில கற்கருவிகளைக் கண்டெடுத்து, இவை கற்கால மக்களின் ஆயுதங்கள் என்று கருத்து தெரிவித்தார்.
பர்கிட்,
எச்.டி. சங்காலியா, வி.டி. கிருஷ்ணசாமி போன்ற
பலர் இப்பணியில் ஈடுபட்டனர்.
1916ல் புரூஸ்புட் தருமபுரி பகுதியிலுள்ள
பர்கூர் மலைப்பகுதியில் சில கற்கருவிகளை கண்டெடுத்தார். பின்னர் வந்தவர்கள்
இவற்றைக் கல்லாயுதங்கள் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.
இவற்றைப் போன்ற கல்லாயுதங்கள் வரட்டனபள்ளி, கப்பல்வாடியிலும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் குடியம் குகைப்பகுதியில் சுமார் 30 இடங்களில் கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு அகழ்வாய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தில்
கல்லாயுதங்கள் செய்யும் தொழிற்பட்டறைகளும், வாழ்விடங்களும் இருந்தமை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக