தமிழர்களின் திணை வாழ்வு - திருமண முறை
தமிழர்களின் திணை
வாழ்வு - திருமண முறை
சங்ககால மக்கள் திணை வாழ்வியலை மேற்கொண்டு இருந்தனர்.
அகத்திணை புறத்திணை என்று அதனை இருவகையாக பிரிக்கலாம்.
அகத்திணை என்பது அக வாழ்வைப் பற்றிக் கூறுவது.
அகத்திணை என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
எனும் ஐந்திணைகளை உள்ளடக்கியது.
அகத்திணை மரபு என்பது ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல்
கொண்டு இன்புற்று மகிழும் ஒழுக்கத்தினை கூறுவர்.
புறத்திணை என்பது போர், கொடை, ஈகை பற்றி கூறுவது.
அகத்தினைக்கு மாறான பிற வாழ்வியல் கூறுகளை எல்லாம் புறம்
என்று அழைத்தனர்.
இவ்விரண்டின் அடிப்படையில் உருவானது சங்க இலக்கியம்.
உரிப்பொருள்
முல்லைத் திணைக்கு இருத்தலும்
இருத்தல் நிமித்தமும்,
குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ,மருதம் ஊடலும் ஊடல்
நிமித்தமும் நெய்தல் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்,
பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்று உரிப்பொருள்கள்
வரையறை செய்யப்பட்டுள்ளன.
முதற்பொருள்
மற்றும் கருப்பொருள்கள்
உரிப்பொருளை சிறப்பிக்கும் ஒன்று முதற்பொருள் .
நிலமும் பொழுதும் முதற்பொருள்
ஆகும்.
பொழுதினை காலம் என்றும் கூறலாம்.
நிலம் :
குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடங்களும்
முல்லை - காடும் காடு சார்ந்த இடங்களும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடங்களும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடங்களும்
பாலை - குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பில் இருந்து
திரிந்த
மணலும் மணல் சார்ந்த பகுதியும் ஆகும்.
பொழுது
பொழுதினை பெரும் பொழுது சிறு பொழுது என்று இரு வகையாகக்
கொள்ளுவர்.
பெரும் பொழுது :
கார் , கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று
ஆறு வகைப்படும்.
சிறுபொழுது:
மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு
என அறுவகைப்படும்.
கருப்பொருள்:
கருப்பொருள்கள் 14 வகைப்படும்.
தெய்வம்,உணவு,பறை,பறவை,விலங்கு,பூ, ஊர் போன்றவையும்
தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
அகத்திணை = களவு வாழ்க்கை +
கற்பு வாழ்க்கை
அகத்திணை காதல் வாழ்க்கையைக் களவு, கற்பு என்று
இருவகையாகப் பிரிக்கின்றது.
ஊர் அறியும் வகையில் வயது வந்த ஆணும் பெண்ணும் காதல்
செய்து இன்புறும் காலம் களவு எனப்பட்டது.
சுற்றத்தாரும் ஊராரும் அறிய திருமணம் செய்து கொண்டு வாழும்
வாழ்வு வாழ்க்கை கற்பு எனப்பட்டது .
திருமணம் / வரைவு / வதுவை / நல்மணம் / கரணம்
கற்பு எனப்படுவது, பெறுவதற்குத் தகுதி உடைய தலைவனுக்குக்
தலைவியைக் கொடுக்கும் மரபை உடைய பெற்றவர்கள் கொடுப்பது
திருமணம் என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
களவு கற்பாகவே முடிய வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.
கற்பில் முடியாத களவைப் பற்றி சங்க கால ஆசிரியர்கள்
பேசவில்லை.
தொல்காப்பியர் திருமணத்தைக் கொடுப்போர் இன்றியும் கரணம்
நிகழும் என்று கூறுவதில் இருந்து எப்போதாவது ஒருமுறை
தலைவனும் தலைவியும் ஊர் அறியாமல் உடன் போக்கில்
ஈடுபட்டதை அறிய முடியும்.
அலர் தூற்றுதல்:
களவு காலத்தில் தலைவன் தலைவி இருவருக்கும் இடையே
உள்ள அன்பைக் குறித்து அலர் எழுதுவதற்குத் தலைமக்கள்,
பெற்றோர் அஞ்சினர்.
வயது வந்த ஆணும் பெண்ணும் தாமே ஒருவரை ஒருவர் கண்டு
காதல் கொண்டு வாழ்வதை சமூகம் எதிர்த்துப் பழி தூற்றி
இருக்கிறது. அலர் ,
அம்பல் என்று கூறுவர்.
இற் செறிப்பு:
வயது வந்த
பெண்களை பெற்றோர் வீட்டின் கண் இருக்கச் செய்தல்
இற் செறிப்பு.
ஒரு தாய் கட்டுப்பாடு இன்றி வெளியில் செல்லும் தன் மகளை
பார்த்து அவள் வயது வந்த பெண் என்பதை நினைவில் நிறுத்தி
வீட்டிலேயே இருக்குமாறு பணித்த செய்தியும் சங்க
இலக்கியத்தில்
காணப்படுகிறது.
உடன்
போக்கு
பெற்றோர் அறியின் தங்கள் காதலுக்குத் தடை ஏற்படும் என்று
அஞ்சிய காதலர்கள் உடன்போக்கில் ஈடுபட்ட செய்தியும்
காணப்படுகிறது.
பெற்றோர் அவளைத் தேடிச் சென்றதாகப் பல பாடல்கள்
கூறுகின்றன.
அறத்தோடு நிற்றல்
தலைவி காதலில்
ஈடுபட்டால் அவளுடைய மேனியிலும் போக்கிலும் மாற்றம் ஏற்படும்போது அதனை தாய் அறிந்தால்
சிக்கல் ஏற்படும் என்பதற்காக தோழி
அறத்துடன் நிற்றல் எனும் செயலை செய்துள்ளார்.
மடல்
ஏறுதல்
தன்மகள் காதலில் ஈடுபட்டது கண்டும் அவளை மணம் செய்து
கொடுக்க பெற்றோர் மறுத்தபோது தலைவன், தலைவியின் படத்தை
எழுதி கையில் கொண்டு பனை மட்டையால் செய்த குதிரையின்
மீது ஏறி ஊரறிய தோன்றுவதனை மடலேறுதல் என்று குறிப்பிடுவர்.
இதனைப் பாடிய
புலவரை மடல்பாடிய மாதங்கீரனார் என்று
கூறினர்.
ஏதேனும் ஒரு காரணத்தால் அல்லது ஏற்றத்தாழ்வுகளாலோ,
தகுதிநோக்கியோ இத்தகைய திருமணங்கள்
மறுக்கப்பட்டிருக்கின்றன.
பரிசமளித்தல்
பெண்ணுக்கு மணமகன் பரிசமளிக்கும் வழக்கம் தொன்று தொட்டு
தமிழர் மரபு அன்று முதல் இன்று வரை இத்தகைய முறை பரியம்
பரிசம் என்றும் அழைக்கப்படுகிறது.
திருமணச் சடங்குகள்
திருமணம் சார்ந்த பல்வேறு சடங்குகள் சங்க
காலத்தில் காணப்படுகின்றன.
திருமண சடங்கு பொய்யும் குற்றங்களும் தோன்றிய பின்னரே
தோன்றியிருக்க வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
சான்றோர்கள் திருமணத்தை
செய்து வைத்தனர்.
திருமணம் பெண்ணின் பெற்றோர் கொடுக்க மணமகன்
ஏற்றுக்கொள்ளும் வழக்கமாக இருந்திருக்கிறது.
எனினும் கொடுப்பவர்கள் இல்லாமலும் சில நேரங்களில் திருமணம்
நடைபெற்றது உண்டு .
திருமணச் சடங்கு
திருமணத்தன்று உளுத்தம் பருப்பு கூட்டி சமைத்த குறைவான
பொங்கலை விருந்தினருக்கு பரிமாறினர்.
வரிசையாக கால்களை நிறுத்தி அமைக்கப்பட்ட பந்தலில் புது
மணலைப் பரப்பி
விளக்குகள் இட்டனர்.
வீடுகளில் மாலைகள் தொங்க விடப்பட்டன.
தீக்கோள்கள் இல்லாத வளைந்த வெண்மையான திங்களை
தீமையற்ற சிறந்த புகழை உடைய ரோகிணி விண்மீன் வந்து கூடும்
நன்னாளில் மிக்க இருள் நீங்கப் பெற்ற பொழுது புலர்ந்த
நேரத்தில்
திருமணம் நடைபெற்றது.
மனவினைகள் ஆரவாரம் மிக்க முதிய மகளிர் நடத்தி வைத்தனர்.
பெண்கள் நீர் நிரம்பிய குடங்களைச் சுமந்து வந்தனர்.
சிலர் தம் கைகளில் புதிய அகன்ற மட்கலங்களை ஏந்தி வந்தனர்.
தேமல் படர்ந்து அழகிய வயிற்றை உடைய மக்களை ஈன்றெடுத்த
மகளிர் நால்வர் கற்பிலிருந்து வழுவாமல் வாழ்க என்று வாழ்த்தி
திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இதனை அகநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
தூய ஆடையுடனும் அணிகலன்களுடனும் மணப்பெண் பொலிவுற்று
இருந்ததையும் மழைமேகம் முழங்குவது போன்று மணஒலி
முழங்கியது.
கருத்துகள்
கருத்துரையிடுக