பண்டையத் தமிழரின் விளையாட்டுகள்
பண்டையத்
தமிழரின் விளையாட்டுகள்
ஒரு இனத்தின் பண்பாட்டைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அந்த காலத்தில்
வழங்கப்பட்டு வந்த அல்லது வழக்கிலிருந்த விளையாட்டுகள்
நமக்கு உதவும். சங்க காலத்தில் மக்கள் தங்களுடைய பொழுதினைப் பயனுள்ள வகையில் போக்குவதற்கு விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.
புனலாடுதல்:
ஆண்களும் பெண்களும் ஆறுகளிலும் குளங்களிலும் நீரில் விளையாடிய இவவிளையாட்டினை அகத்திணைப் பாடல்களில் அறியலாம்.
குதித்து மணல் கொள்ளல்:
பெண்கள் ஒன்று சேர்ந்து நின்று நீருக்குள் பாய்ந்து குதித்து மணல் கொண்டு வருதல்
ஆகும் .
வட்டாடல்:
அரங்கம் போன்று செய்து காய்களை நகர்த்தி ஆடும் விளையாட்டு ஆகும். இன்றைய கால ஆடு
புலி ஆட்டம் போன்றது.
வல்லாடுதல் என்றும் இவவிளையாட்டு வழங்கப்படும்.
வயது முதிர்ந்த பெரியவர்களும் இதனை ஆடினர் .
கழங்காடுதல்:
மகளிர் விளையாட்டில் ஒன்று இது.
வீட்டின் திண்ணைகளில் பொன்னாலன கழங்கைக் கொண்டு கழங்கு விளையாடுவார்.
ஊசலாட்டம்:
மரத்தின் கிளைகளில் கயிற்றினைச் சுற்றி
ஊசலாகக் ( ஊஞ்சல் ) கட்டி அதில் உட்கார்ந்து
ஆடி மகிழ்ந்தனர்.
அப்போது அவர்கள் பாடிக்கொண்டு விளையாடுவர். அதற்கு ஊசல் வரி என்று பெயர்.
ஓரையாடுதல்
மகளிர் விளையாட்டில் ஒன்றான இதில் பெண்கள் நண்டு, ஆமை போன்றவற்றை குச்சியைக் கொண்டு
அலைத்து விளையாடுவது ஆகும் .
முக்கால் சிறுதேர் உருட்டுதல்:
ஆண் பிள்ளைகள் மூன்று கால்களை உடைய தேரினை உருட்டி விளையாடுவர்.
வண்டல் இழைத்தல்:
மணலால் பொம்மை போன்ற பாவை செய்து அதற்கு பூச்சூட்டிப் பெண்கள்
விளையாடுவர்.
பந்தாடுதல் :
நூலால் இழுத்துக் கட்டப்பட்ட பந்தினைக்
கொண்டு பெண்கள் ஆடுவது .
கோழிப் போர், ஏறு
தழுவுதல்,முரண் களரி போன்ற விளையாட்டுகளும் அக்காலத்தில்
சிறப்புடன் விளையாடப்பட்டன.
கருத்துகள்
கருத்துரையிடுக