உலோகக் காலம்-இரும்புக்காலம்

 

                      உலோகக் காலம்

புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் உலோகக் காலம் செம்புக்  

காலம் என்றழைக்கபட்டது .

தமிழ் நாட்டில்  இரும்புக் காலமும் வடநாட்டில் செம்புக் காலமும்

தோன்றியது.  

இரும்புக்காலம் மற்றும் செம்புக்காலத்திற்கு முன்பு வெண்கலக் காலம்

என்று ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கருதுவர்.

இக்காலத்தில் இரும்பு மற்றும் செம்பு  ஆகிய உலோகங்கள்

பயன்படுத்தப்பட்டன.

மனிதனின்  வரலாற்றில், உலோகத்தை உருக்கிவார்க்கும்

தொழில்நுட்பத்தைக்  கண்டுபிடித்ததும், உலோகத்திலான பொருட்களை

உருவாக்கி பயன்படுத்தியதும் முக்கிய நிகழ்வுகளாக திகழ்கின்றன .

உலோகக் காலத்திலும் கற்கருவிகளும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து

வந்தன.

இக்காலத்தில் உலோக தாதுக்களைத் தேடி மக்கள் நெடுந்தூரம் பயணம்

செய்யவும் தொடங்கினர்.

இதனால் செம்பு கற்கால பண்பாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட்டன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் செம்பு கற்காலப் பண்பாடுகள்

காணப்படுகின்றன.

 ஆற்றங்கரைகளிலேயே உலோகக் கால  பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன.

 

குறிப்பாக ஹாப்பா பண்பாடு செம்பு கற்காலப் பண்பாட்டின் ஒரு

பகுதியேயாகும்.

தென்னிந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, பெண்ணாறு,

காவிரி ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குகளில் இக்காலத்தில் குடிகள் ,

சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன.

மாதியத் தரைக் கடலில் உள்ள கரீட் என்னும் தீவிலும் பாலத்தீனத்திலும்

காணபபடுவதைப் போலவே    ஆதிச்சநல்லூரிலும் கற்கருவிகளுடன்

இரும்புக் கருவிகளும் கலந்து காணப்படுகின்றன.

செங்கல்பட்டிலும்  பெரும்பேயர் என்னும் இடத்திலும் , கேரளத்தில்

தலைச்சேரி  என்னும் இடத்திலும் கற்கருவிகளும் இரும்புக் கருவிகளும்

கலந்தே கிடைக்கின்றன.

தமிழகத்தில் கற்காலம் முடிவுறும் போதே இரும்புக்காலம் தொடங்கியது

என்று கருத வேண்டும்.  

வேத இலக்கியங்களில் இரும்பு பற்றி அடிக்கடி குறிக்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் இரும்புக் காலமும் பெருங்கல் காலமும் சமகாலம்

எனக் கருதப்படுகிறது.

மெகாலித்க் என்றால் பெரிய கல் என்று பொருள். கல்லறையின்மேல்

சுற்றி அடுக்கப்பட்ட கற்களை  இது குறிக்கிறது.

 அத்தகைய கல்லறைகள் தென்னிந்தியாவில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரில் கல்லறைக் குழிகளில் கருப்பு சிகப்பு

வண்ணத்தாலானப் பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி மற்றும்

அரிவாள், சிறு ஆயுதங்கள் போன்றவை காணப்படுகின்றன.

 இதனை குகை வட்டங்கள் குழி வட்டங்கள் என்று கூறுவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்