தொல் பழங்காலம்- வரலாற்றுக்கு முந்தையக் காலம்- கற்காலம்-தொல் தமிழர்

 

        

                 தொல் பழங்காலம்- வரலாற்றுக்கு முந்தையக் காலம்-கற்காலம்

                                                         தொல் தமிழர்  

 

வரலாற்றுக்கு முந்தையக் காலம் தொல் பழங்காலம் என்றழைக்கப்படும்.

இக்காலத்தைக்  கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைப்பர் .

தொல் பழங்காலம்  என்பது மனித இனம்  தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருத வேண்டும் .

எவ்விதமான எழுத்துச் சான்றுகளும்  இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற மிச்சமான  எச்சங்களைக் கொண்டு மனிதனின்  வரலாற்றை அறிந்து கொள்வது  தொல் பழங்காலம் ஆகும்.

     தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனமே  கற்கால மனித இனம்          என்று அழைக்கப்படுகிறது.

தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி   மனிதன் உணவைத் தேடிக் கொண்டான்.

       மனித வாழ்விற்குக்  கற்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டன  .

 அவைகளை வேட்டையாடுவதற்கு  ஏற்ற கருவிகளாக மாற்ற மனிதன்

 முதலில் சிந்திக்கத் தொடங்கியதாலும் அக்காலம் கற்காலம் என   

  அழைக்கப்படுகிறது.

               அத்திரம்பாக்கம்

 தமிழகத்தில் அத்திரம்பாக்கம் என்ற இடம் தொல்பழங்கால மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள்  லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர்.

இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை.

           மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின்  பயனையும்            அறிந்திருக்கவில்லை.

         இம்மக்களின்  சான்றுகள்  இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு    

        காணப்படுகின்றன.

        இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த   

        தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்