ஆனாத செல்வத்து - குலசேகர ஆழ்வார்-பொருள்

 

ஆனாத செல்வத்து - குலசேகர ஆழ்வார்-பொருள்

 

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வான்ஆளும் செல்வமும் மண்ணரசும் நான் வேண்டேன்

தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

 

பொருள்:

தேவலோகத்திலே அரசனான  இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும் இந்திர போகத்தையும்இவ்வுலகம் முழுவதையும் ஆண்டு இன்பமடையும் அரச போகத்தையும் நான்  விரும்ப மாட்டேன் . இத்தகைய இன்பங்கள் எல்லாவற்றையும்விட திருவேங்கட மலையில் உள்ள நீர்ச்சுனையில் ஒரு மீனாகப் பிறந்து திருவேங்கடமலையை விட்டுப் பிரியாமல் வாழவே விரும்புகிறேன் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்