முக்கூடல் பள்ளு -கறை பட்டுள்ளது - பொருள்
முக்கூடல்
பள்ளு -கறை பட்டுள்ளது - பொருள்
கறைபட்
டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட் டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட்
டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிபட் டுள்ளது நெய்படுந் தீபம்
குறைபட்
டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட் டுள்ளது வல்லியங் கொம்பு
மறைபட்
டுள்ளது அரும்பொருட் செய்யுள்
வளமை ஆசூர் வடகரை நாடே.
பொருள்
கறை நிலாவில் மட்டுமே உள்ளது. மக்கள் நடத்தையில் இல்லை
கட்டுப்பாட்டில் இருப்பது கம்பத்தில்
கட்டப்பட்டிருக்கும் யானை மட்டுமே
மக்கள் விடுதலையாக வாழ்கின்றனர்
வானத்தில் பறக்கும் பறவைக்கு
மட்டுமே சிறைபட்டிருக்கும் .
மக்களுக்குச் சிறை
(சிறைச்சாலை) இல்லை
எண்ணெய் ஊற்றி எரியும்
விளக்கில் மட்டுமே திரி உள்ளது. மக்களிடம்
திரிபு
இல்லை.
அரைத்துத் தேய்வது அம்மி
மட்டுமே. மக்களின் விரிந்த மனத்தைத்
தேய்க்க
முடியாது.
வல்லிக் கொடிக்கு மட்டுமே
வளைந்து கொடுக்கும் குழைவு உள்ளது
வீரரிடம் குழைவு இல்லை.
செய்யுளில் மட்டுமே அரிய
பொருள்கள் மறைந்து கிடக்கின்றன
மக்களிடம் ஒளிவு மறைவு இல்லை.
இது மூத்த வளமை மிக்க ஆசூர் வடகரை நாட்டு நிலைமை ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக