குறுந்தொகை - மிளை கந்தன் - வேம்பின் பைம் காய்

       குறுந்தொகை - மிளை கந்தன் - வேம்பின் பைம் காய்

 

          வேம்பின் பைம் காய் என் தோழி தரினே

          தேம் பூம் கட்டி என்றனிர்; இனியே

          பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண் நீர்

          தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

          வெய்ய உவர்க்கும் என்றனிர்

          ஐய அற்றால் அன்பின் பாலே!

 

பொருள்

     வேப்பமரத்தின் பசிய காயை தலைவி தரும்போது

     இனிப்பான நல்ல வெல்லக்கட்டி என்று கூறினான் தலைவன். 

இப்பொழுதோ, பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள 

தெளிந்த நீரை,தை மாதத்துக் குளிர்போன்று குளிரவைத்ததாகக் 

கொடுத்தாலும் மிகவும் உவர்ப்பாய் இருக்கிறதென்று கூறுகின்றான். 

தலைவனே! அப்படி ஆகிவிட்டது உம் அன்பின் தன்மை என்கிறாள் 

தலைவி. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்