குண்டலகேசி -பாளையாம் தன்மை-பொருள்-விளக்கம்
குண்டலகேசி
குண்டலகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார்.
பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ
பொருள் :
1. கருவில் பாளையாக உருவாகி , பிறந்த பின் பாலனாக மாறினான். பாளை என்னும் தன்மை போனதற்கு அழவில்லை!
2. பிறகு பாலன் நிலை செத்து, காளை நிலை வந்த போது அழவில்லை!
3. பிறகு காளை நிலை கடந்து, காமுறும் இளமை நிலை வந்த போது அழவில்லை!
4. பின் இளமை நிலை கடந்து, மூப்பு நிலை வந்த போதும் அழவில்லை.ஆனால் மூப்பும் முடிந்து இறப்பு வந்த போழ்து மட்டும் ஏன அழ வேண்டும் என்கிறார் ஆசிரியர்
கூறப்பட்டுள்ள பருவங்கள் :
1.பாளை
2.பாலன்
3.காளை
4.இளமை
5.மூப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக