திருஞான சம்பந்தர் – மண்ணின் நல்லவண்ணம்- பொருள்

         திருஞான சம்பந்தர் – மண்ணின் நல்லவண்ணம்- பொருள்

 

மண்ணின்நல் லவண்ணம்

  வாழலாம் வைகலும்

எண்ணின்நல் லகதிக்கி

  யாதுமோர் குறைவிலைக்

கண்ணின்நல் லஃதுறுங்

  கழுமல வளநகர்ப்

பெண்ணின்நல் லாளொடும்

  பெருந்தகை யிருந்ததே

பொருள் : உயிர்கள் இந்த மண் உலகத்தில் நலமோடு வாழலாம். தினமும் 

இறைவனை வழிபட்டு எவ்வித குறைவும் இன்றி  வீடுபேற்றை 

அடையலாம். இதை எல்லாம் மக்களுக்கு அருளும் பொருட்டே கண்ணுக்கு 

இனிய , நல்ல வளங்களைக் கொண்டுள்ள கழுமலம் என்னும் ஊரில் 

பெண்களில் சிறந்தவள் ஆன பார்வதியோடு இறைவன் காட்சி தருகிறான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்