இராவண காவியம்- புலவர் குழந்தை- தாய் மொழிப் படலம் -விளக்கம் - பாடல்

 

இராவண காவியம்- புலவர் குழந்தை- தாய் மொழிப் படலம்

 

இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் 

காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் 

காண்டம் - என ஐந்து காண்டங்களையும், 57 படலங்களையும், 3100 

பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் 

கொண்டு பாடப்பட்டுள்ளது.

1.        

ஏடுகை யில்லார் இல்லை இயலிசை கல்லார் இல்லை

பாடுகை யில்லார் இல்லை பள்ளியோ செல்லா ரில்லை

ஆடுகை யில்லார் இல்லை அதன்பயன் கொள்ளார் இல்லை

நாடுகை யில்லார் இல்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.

 

பொருள்

பழங்கால தமிழகத்தில் படிக்கின்ற தமிழ் நூல்களைக்  கையில் 

வைத்திருக்காதவர்கள் என்று ஒருவரும் இல்லை.  இயல் தமிழையும் 

இசைத் தமிழையும் கற்காதவர்கள் என்று எவரும் இல்லை.  பாடுகின்ற 

திறமை உடையவர்கள் இல்லை என்ற குறை ஏதுமில்லை.  கல்வி 

கற்பதற்காக பள்ளிக்கூடம் செல்லாதவர்கள் என்று யாரும் இல்லை. 

நடனம் ஆடக்கூடியவர்கள் இல்லாமலும்  இல்லை.  கலைகளின் பயனை 

பற்றி அறியாதவர்களும் இல்லை.  

2.

தமிழெனது ருகட் பார்வை தமிழெனது உருவப் போர்வை

தமிழெனது உயிரின் காப்புத் தமிழெனது உளவே மாப்புத்

தமிழெனது உடைமைப் பெட்டி தமிழெனது உயா்வுப் பட்டி

தமிழெனது உரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ.

பொருள் :

தமிழ் மொழியானது இரு கண்ணின் பார்வையாகும். தமிழ் 

மொழி உருவத்திற்கு போர்த்திக் கொள்ளும் பாதுகாப்பான போர்வையாகும். 

தமிழ் மொழி எனது உயிரைப் பாதுகாக்கும் கவசம் ஆகும்.  தமிழ் எனது 

உள்ளத்தின் வலிமையாகும். எனது உடைமைகளை வைத்துக் கொள்ளும் 

பெட்டியாக விளங்குவது தமிழ் மொழியாகும்.  தமிழ் எனது உயர்விற்கான 

உறைவிடமாக விளங்குகிறது.  தமிழ் எனது உரிமை என இவ்வாறு தமிழ் 

மொழியின் சிறப்புகளை தனித்தனியாக பலர் வளர்க்கின்றனர்.

3.

நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்

வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண்டாட்டம்

பாடெலாந் தமிழின் தேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்

மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமிழ் அகத்து மாதோ.

பொருள்

 உலகின் தலைசிறந்த மொழிகளில் ஒன்றாக விளங்குவது தமிழ்.  நாடு 

முழுவதும் புலவர்களின் கூட்டம் காணப்படுகின்றது.  நகரங்கள் 

அனைத்திலும் பள்ளிகளின் பெருக்கம் அதிகமாகி இருக்கின்றது.  வீடுகள் 

எங்கும் தமிழ்த்தாய்க்கு  கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. திருவிழாக்கள் 

நடைபெறும் எல்லா இடங்களிலும் தமிழ் மொழியைக் 

கொண்டாடுகின்றனர். பணியாற்றுகிற இடங்களில் எல்லாம் தமிழ் மொழி 

செல்வமாக விளங்குகிறது வயல் நிலங்களில் எல்லாம் கூட தமிழாகவே 

தான் பாடல்கள் ஒலிக்கின்றன.  திரும்புகின்ற திசைகளில் எல்லாம் தமிழ் 

மொழி பேசுவோர் ஓசை கேட்கிறது.

4.

 உண்டியை உண்ணார் பொன்பட் டுடையினை எண்ணார் கன்னற்

கண்டினைப் பேணார் செம்பொற் கலன்களைப் பூணார் வண்ணச்

செண்டினைச் சூடார் சாந்தத் திரளினை நாடார் யாழின்

தண்டினைத் தீண்டார் யாருந் தமிழ்மொழி பயிலாக் காலே.

பொருள் :

தமிழ் மொழியைப்  பயிலாதவர்கள் உணவு உண்ண மாட்டார்கள். 

பட்டாடைகளை அணிய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். 

நாள்காட்டும் கருவியைக்  காண மாட்டார்கள்.  செம்மையான பொன்னால் 

செய்யப்பட்ட அணிகலன்களை அணிய மாட்டார்கள்.  பல வண்ணங்களால் 

பூச்செண்டினை  தலையில் சூட மாட்டார்கள். சாந்து போல் நறுமணப் 

பொருட்களை விரும்ப பூச  மாட்டார்கள்.  யாழ் இசைக்  கருவியைத்  

தொட மாட்டார்கள்.  தமிழர்கள் அனைவரும் தமிழ் மொழியைப் 

பயில்வதால்தான் தான் மனமகிழ்வைத்  தரும் எல்லா செயல்களிலும் 

ஈடுபடுகின்றனர்.  

5. பாடுபவ ருக்கும் உரை பண்ணுபவ ருக்கும்

ஏடதுவி ரித்துஉரை யிசைப்பவர் தமக்கும்

நாடுநக ரோடு அவர் நயப்பவை கொடுத்தும்

தேடிவரு வித்துமுயர் செந்தமிழ் வளர்த்தார்.

பொருள் :

எல்லாவற்றையும் விட  உயர்வானது தமிழ் மொழி.  பாடக் 

கூடியவருக்கும் உரையாற்றுபவருக்கும் நூலினை நன்கு கற்றபின் 

இனிமையாக  இசையை இசைப்பவருக்கும் நாட்டையும் நகரத்தையும் 

அவர்கள் விரும்புகின்ற அனைத்துப்  பொருள்களையும் கொடுத்து 

முத்தமிழை  வளர்ப்பவர்களைத்  தேடி வரவைத்து உயர்வான செந்தமிழை 

முன்னோர்கள் வளர்த்தனர். அவ்வாறு வளப்பதற்கான  அத்தனை 

வழிகளையும் அறிந்து தாய்த்  தமிழை மக்கள் வளர்த்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்