ஐங்குறுநூறு-வாழி ஆதன் வாழி அவினி-பாடல் - விளக்கம்

 

                           ஐங்குறுநூறு

தலைப்பு : ஆதன் அவினி!

புலவர்   : ஓரம்போகியார்

திணை  : மருதம்

துறை   :   தோழி தலைவனிடம் சொன்னது.

பாடல் :  

'வாழி ஆதன், வாழி அவினி!

நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!'

என வேட்டோளே, யாயே: யாமே,

'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்

யாணர் ஊரன் வாழ்க!

பாணனும் வாழ்க!' என வேட்டேமே.

 

பொருள் : சேர மன்னர்களான ஆதனும்  அவினியும் வாழ்க . நெல் பல 

விளைச்சல் தரட்டும்.  பொன் நிறைந்து சிறக்கட்டும் என விரும்புகிறாள் 

தாய்.  நானும் அதையே விரும்புகிறேன். மொட்டுக்கள் நிறைந்த காஞ்சி 

மரங்களும் சினையான சிறு மீன்களும் நிறைந்த செழித்த ஊரைச் 

சேர்ந்தவனான தலைவன்  வாழ்க. அவனுக்குத் தூதாக 

விளங்கும் பாணனும் வாழ்க என விரும்புகிறேன்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்