புறநானூறு- ஒளவையார-பொதுவியல்-பொருண்மொழிக் காஞ்சி-விளக்கம்

 

                        புறநானூறு

புலவர் : ஒளவையார் பாடியது.

திணை :  பொதுவியல்.

திணை விளக்கம் : வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது

திணைகளில் அடக்கிக் கூறமுடியாத பொதுவான செய்திகளைக்

கூறும் திணை

துறை  : பொருண்மொழிக் காஞ்சி.

துறை விளக்கம்: முனிவரும் அவரைப் போன்றவரும் இம்மை

மறுமைகளில் உயிருக்கு உறுதியைத் தருவது இன்னது என்று தாம்

தெளிவாய் அறிந்த பொருளைச் சொல்வது ‘பொருண்மொழிக் காஞ்சி’

என்னும் துறையாகும்.

பாடல்

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே. 

 

பொருள் :நாடாக இருப்பினும் , காடாக இருப்பினும், தாழ்ந்த பள்ளமான 

நிலமாக இருப்பினும் , மேடான நிலமாக இருப்பினும்  எந்த இடத்தில் 

ஆண்கள்  நல்லவர்களாக   இருக்கின்றனரோ , அவ்விடத்தில் நிலம்  

மேன்மை பெற்றுத் திகழும்.  

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்