புறநானூறு - தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி - பொருண்மொழிக் காஞ்சி-பொதுவியல் -விளக்கம்
புறநானூறு.
புலவர் :மதுரைக்
கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
திணை: பொதுவியல்
திணை விளக்கம்
: வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது
திணைகளில்
அடக்கிக் கூறமுடியாத பொதுவான செய்திகளைக் கூறும்
திணை
துறை : பொருண்மொழிக் காஞ்சி
துறை
விளக்கம்: முனிவரும் அவரைப்
போன்றவரும் இம்மை
மறுமைகளில்
உயிருக்கு உறுதியைத் தருவது இன்னது என்று தாம்
தெளிவாய் அறிந்த பொருளைச் சொல்வது ‘பொருண்மொழிக் காஞ்சி’
என்னும்
துறையாகும்.
தெண்
கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்
குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடு
நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு
மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது
நாழி; உடுப்பவை
இரண்டே;
பிறவும்
எல்லாம் ஓர் ஒக்குமே;
செல்வத்துப்
பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
பொருள்: தெளிந்த கடல் நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்கு விட்டுத்
தராமல் தமக்கே உரித்தாக கொண்டு வெண்கொற்றக் குடையின் கீழ் ஆளும் தன்மையை உடைய அரசரக்கும்
, இரவும் நண்பகலும் உறங்காமல் விரைந்து செல்லும்
தன்மை உடைய விலங்குகளை வேட்டை ஆடும் கல்வியில்லாத ஒருவனுக்கும் உண்பதற்குத் தேவை நாழி அளவு உணவே. உடுப்பதற்குத் தேவை இரண்டு ஆடைகளே.
ஆதலாற் செல்வத்தைப் பெற்றதன் பயன் பிறருக்குக்
கொடுத்தல் ஆகும். செல்வத்தை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது கூடாது .
கருத்துகள்
கருத்துரையிடுக