குறுந்தொகை-தேவகுலத்தார்-நிலத்தினும் பெரிதே - வானினும் உயர்ந்தன்று- பாடல்- விளக்கம்
குறுந்தொகை
புலவர் : தேவகுலத்தார்
திணை :குறிஞ்சி
துறை :தலைமகன்
சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி,
தோழி இயற்
பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.
கூற்று விளக்கம் :வரையாது ஒழுகும் தலைவன் வேலிப் புறத்தே
நின்றதை அறிந்த தோழி அவன் வரைந்து கொள்ள வேண்டுமென்னும்
எண்ணம் உடையவளாகி அவன் செவியில் படும்படி அவனது நட்பைப்
பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு மிகச் சிறப்புடையது என்று
உணர்த்தியது.
பாடல்
நிலத்தினும்
பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும்
ஆர் அளவின்றே- சாரல்
கருங்
கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன்
இழைக்கும் நாடனொடு நட்பே.
பாடல் விளக்கம் :கருமையான கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின்
மலர்களில் உள்ள தேனைக் கொண்டு பெரிய தேன் கூட்டினை வண்டுகள்
உண்டாக்கும். அத்தகைய நாட்டை உடைய தலைவனோடு
நான் கொண்ட நட்பானது நிலத்தைக் காட்டிலும் பெரியது. பூமியைக்
காட்டிலும் அகலம் உடையது. ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது.
கடலைக்
காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது என்கிறாள் தலைவி.
கருத்துகள்
கருத்துரையிடுக