நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர் - நற்றிணை - பாடல் - விளக்கம்
நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர் - நற்றிணை - பாடல்
- விளக்கம்
புலவர் : கபிலர்
திணை : குறிஞ்சி
துறை : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது
கூற்று விளக்கம் – பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை
விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி
“தலைவன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்” எனத்
தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றாள்.
பாடல்
நின்ற
சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும்
என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத்
தண் தாது ஊதி,
மீமிசைச்
சாந்தில்
தொடுத்த தீம் தேன் போல,
புரைய
மன்ற, புரையோர் கேண்மை;
நீர்
இன்று அமையா உலகம் போலத்
தம்
இன்று அமையா நம் நயந்தருளி,
நறு
நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை
உறுபவோ? செய்பு அறியலரே!
பொருள் :
தோழீ ! நம் காதலர் சொன்ன சொல்லில் இருந்து தவறாத வாய்மையை
உடையவர்.
நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையை உடையவர்.
எப்பொழுதும் என் தோள்களைப் பிரியக் கூடிய குணத்தை கொண்டவர்
இல்லை .
அத்தகைய உயர்ந்தவரான தலைவனின் நட்பானது தாமரையின் குளிர்ந்த
தேனினையும் உயர்ந்த சந்தனத்தின் தேனினையும் குடித்த தேனியானது ,
அந்தச் சந்தன மரத்தில் கட்டி
வைத்த இனிய தேன் போலத் திண்ணமானது.
நீர் இன்றி அமையாத இந்த உலகத்தைப் போல நான் அவரின்றி இருக்க
இயலாது என்பதை அறிந்தவர்
.
மேலும் அவரைப் பிரிதலால் என் நெற்றியில் ஏற்படும் பசலை நோய்க்கு
அஞ்சியும் என்னை விட்டுப் பிரிந்து செல்ல எண்ண மாட்டார்
என்கிறாள் தலைவி .
கருத்துகள்
கருத்துரையிடுக