காதல்- பிச்சமூர்த்தி-விளக்கம்

காதல்- ந.பிச்சமூர்த்தி   

 

எண்ணாத நாள் ஒன்றில்

வந்தார் –

கோடை மழைபோல்

காட்டாற்று வெள்ளம்போல்

வீடெங்கும் குப்பைகூளம்

எங்கிலும் கந்தல் துணிகள்

முகம் எங்கிலும் வேர்வை

கைஎங்கும் சமையல் மணம்

எங்கும் இல்லநெடி

சிறு புகைச்சல்,

ஒட்டடை

வேளை பார்த்தா

நாதர் வந்தார்?

அசடானேன்.

கேட்பது அல்ல காதல்

தருவதுதான் என்று

தரையில் அமர்ந்தார்

என்னைக் காணேன்.

பாடலின் பொருள்:

 பாடலின் பொருள்:

 தான் காதலன் இன்று வருவான் என்று வீட்டைப் பெருக்கி சுத்தமாக வைதிருந்து காத்திருந்த போது  அவன் வரவில்லை. ஆனால், கோடையில் வரும் எதிர் பாராத  மழபோல, காட்டாற்றில் வரும்  திடீர் வெள்ளம் போல எதிர்பாராத நாள் அன்று காதலன் வீட்டிற்கு வந்து நிற்கின்றான். அன்று பார்த்து வீடெங்கும் குப்பைக் கூளங்கள் நிறைந்திருக்கின்றன. எங்கும் கந்தல் துணிகள் சிதறிக் கிடக்கின்றன. காதலியின் முகம் முழுவதும் வியர்வை வழிந்து கொண்டிருக்கிறது . கைகளில் சமையல் மணம் கமழ்கிறது . வீட்டின் இயல்பான நிலை அவளைக்  கவலை கொள்ள வைக்கிறது . சமையல் செய்தமையால் வீடெங்கும் சிறு புகைச்சல் ஏற்பட்டுள்ளது . அங்கங்கே  ஒட்டடைகளும் இருந்தன.

 

இப்படிப்பட்ட  நேரத்தில்தானா தன் காதலன்  வர வேண்டும் என்று தவிக்கின்றாள் . என்ன செய்வது ஏது செய்வது என்று  அறியாது நிற்கிறாள.  வந்தவரோ, கேட்டுப் பெறுவதல்ல காதல். தருவதுதான் காதல் என்று கூறிவிட்டு  வீட்டின் நிலைமையைக் பொருட்படுத்தாது தரையில் அமர்ந்தார். அவருடைய காதலில் கரைந்து போய் , தன்னையே தொலைத்து  நின்றாள் அக்காதலி.

.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்