பூதத்தாழவார் - அன்பே தகளியா- நான்காம் திருமொழி
பூதத்தாழவார் - அன்பே தகளியா
அன்பே
தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு
சிந்தை இடுதிரியா — நன்புருகி
ஞானச்சுடர்
விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ்
புரிந்த நான்
விளக்கம்:
அறிவை அளிக்கும் தமிழ் நூலை இயற்றிய நான், அன்பை
அகலாகவும் , அந்த அன்பினால் விளைந்த ஆர்வத்தை
நெய்யாகவும், மனதின் எண்ணங்களை திரியாகவும் இட்டு, அதனாலே உருவாகும் ஞானத்தை ஒளியாக கொண்டு நாராயணனுக்கு
விளக்கு ஏற்றினேன் .
கருத்துகள்
கருத்துரையிடுக