திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் -கற்றாங் கெரியோம்பிக்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் -கற்றாங் கெரியோம்பிக்
|
பாடல் : 1 கற்றாங்
கெரியோம்பிக் கலியை வாராமே விளக்கம் : வேதம் முதலிய நூல்களைக் கற்று அவற்றின்கண் ஓதிய நெறியிலே
நின்று, வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அந்தணர்கள் வாழும் தில்லையிலுள்ள
சிற்றம் பலத்தில் எழுந்தருளியவனும் இளமையான வெள்ளிய பிறை மதியைச் சூடியவனும்
ஆகிய முதல்வனது திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றாது
. பாடல்: 2 பறப்பைப்
படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் விளக்கம் பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று, எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில்
எழுந்தருளியுள்ளவனும், தாயின் வயிற்றில் தங்கிப் பிறத்தல்
இல்லாதவனும், பின் புறம் தாழ்ந்து தொங்கும் சடாபாரம்
உடையவனும் ஆகிய பெருமானை மறவாதவர் மயக்க உணர்வு நீங்கப் பெறுவர். பாடல் : 3 மையா
ரொண்கண்ணார் மாட நெடுவீதிக் விளக்கம் மைதீட்டப்
பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள்,
நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தோச்சி
விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான
தில்லையுள், என்றும் பொய்யாத வேதப்பாடல்களை விரும்பும்
சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்த
உறையும் கோயிலை உடையது சிற்றம்பலமாகும். பாடல் : 4 நிறைவெண்
கொடிமாட நெற்றி நேர்தீண்டப் விளக்கம் : மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள
பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து சிறிதே தாக்கும் தில்லைப்பதியில்
சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் பேரம்பலத்தை அடுத்துள்ள
சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே இன்பம் ஆகும். பாடல் : 5 செல்வ
நெடுமாடஞ் சென்று சேணோங்கிச் விளக்கம் : செல்வவளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து
அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச்செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய
தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய
செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம். பாடல் : 6 வருமாந்
தளிர்மேனி மாதோர் பாகமாந் விளக்கம் புதிதாக மரத்தின்கண் இருந்து வெளிவரும் மாந்தளிர் போன்ற
மேனியளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, திருமகள் விளங்கும் தில்லை மாநகருள்
சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளியவரும், யானைத்தோலை உரித்து
ஆடையாகப் போர்த்தவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமாகிய எம் பெருமான்
திருவடிகளை அல்லது என் உள்ளம் வேறொன்றையுமே விரும்பாது. பாடல் : 7 அலையார்
புனல்சூடி யாகத் தொருபாகம் விளக்கம் : அலைகள் வீசும் கங்கை நதியை முடியிற்சூடித் தன்
திருமேனியில் ஒருபாகமாக மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு மகிழ்ந்திருப்பவனும்
உலகம் போற்ற மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்து அழித்தவனும் ஆகிய
சிற்றம்பலத்துப் பெருமானைத் தலைதாழ்த்தி வணங்குவார் தலைமைத் தன்மையோடு
விளங்குவார். பாடல் : 8 கூர்வா
ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச் விளக்கம் : கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் வலிமையை அழித்துச்
சிறந்த புகழ் மல்கிய சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளிய கங்கையைத் தரித்த சடையினை
உடைய இறைவனை நாள்தோறும் ஏத்துபவருக்குத் தீராதநோய்கள் எல்லாம் தீர்தல் திண்ணம். பாடல் : 9 கோணா
கணையானுங் குளிர்தா மரையானுங் விளக்கம் : வளைந்து சுற்றிய பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ந்த தாமரை மேல் விளங்கும்
நான்முகனும், அடிமுடிகளைக் காணாதவராய்த் தன் திருவடிகளைப்
பரவ, அழல் வடிவில் ஓங்கி நின்றவனும், உயர்ந்தோர் பலர் வாழும் தில்லைப் பதியுள் சிற்றம் பலத்தின்கண்
எழுந்தருளியவனுமாகிய பெருமானைப் போற்ற, நோய்களில் மாட்சிமை
உள்ள கொடிய நோய்கள் எல்லாமும் பயன்தாராது கழியும். பாடல்: 10 பட்டைத்
துவராடைப் படிமங் கொண்டாடும் விளக்கம் மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தரும்
நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் மொழியும் அறியாமையோடு கூடிய
உரைகளைக் கேளாது ஒழுக்கத்தால் மேம்பட்டவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில்
எழுந்தருளிய நடராசப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம். பாடல் : 11 ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன் சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே. விளக்கம் : உலகில் உயர்ந்து விளங்கும் சீகாழிப்பதியில்
தோன்றிய ஞானசம்பந்தன், ஒழுக்கசீலர்களாலே
புனிதமாகக் கொண்டு போற்றப் பெறும் தில்லைச் சிற்றம்பலத்தே எழுந்தருளிய, சூலப்படையுடைய பெருமான் மீதுபாடிய, இத்தமிழ் மாலையாகிய திருப் பதிகத்தை, அழகுறப் பாடவல்லவர் நல்லவர் ஆவர். |
கருத்துகள்
கருத்துரையிடுக