பாரத சமுதாயம் - பாரதியார்

 

                     பாரத சமுதாயம்

              பாரத சமுதாயம் - பாரதியார்

 


பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க!

 

பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய (பாரத)

 

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

 

முழுமைக்கும் பொது உடைமை

 

ஒப்பிலாத சமுதாயம்

 

உலகத் துக்கொரு புதுமை – வாழ்க! (பாரத)

 

மனித ருணவை மனிதர் பறிக்கும்

 

வழக்கம் இனியுண்டோ ?

 

மனிதர் நோக மனிதர் பார்க்கும்

 

வாழ்க்கை இனியுண்டோ ? – புலனில்

 

வாழ்க்கை இனியுண்டோ ? – நம்மி லந்த

 

வாழ்க்கை இனியுண்டோ ?

 

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்

 

எண்ணரும் பெருநாடு,

 

கனியும் கிழங்கும் தானி யங்களும்

 

கணக்கின்றித் தரு நாடு – இது

 

கணக்கின்றித் தரு நாடு – நித்த நித்தம்

 

கணக்கின்றித் தரு நாடு – வாழ்க! (பாரத)

 

இனியொரு விதிசெய் வோம் – அதை

 

எந்த நாளும் காப்போம்,

 

தனியொரு வனுக் குணவிலை யெனில்

 

ஜகத்தினை அழித்திடு வோம் – வாழ்க! (பாரத)

 

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

 

என்றுரைத்தான் கண்ண பெருமான்,

 

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை

 

இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்

 

இந்தியா உலகிற் களிக்கும் – ஆம் ஆம்

 

இந்தியா உலகிற் களிக்கும் – வாழ்க! (பாரத)

 

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

 

எல்லாரும் இந்திய மக்கள்,

 

எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – வாழ்க! (பாரத)

 

பாடல் விளக்கம்

 

இத்தலைப்பில் பாரதியார் பொதுவுடைமைக் கொள்கையைப் 

விளக்குகின்றார் . பாரத நாட்டில் வாழும் மக்களை “வாழ்க வாழ்க“ 

என்றும் சமுதாயம் என்றென்றும் வெற்றிப் பாதை நோக்கி செல்ல 

வேண்டும்  என்பதைக்  குறிக்கும் விதமாக “ஜய ஜய” என்று பாடுகின்றார். 

ஜய  என்னும் சொல் வெற்றியைக் குறிக்கும்.  

அவர் வாழ்ந்தபோது இருந்த 30 கோடி மக்களும் பொதுவுடைமைக் 

கொள்கையைப் பின்பற்ற வேண்டும் விரும்பினார் .  பொதுவுடைமையைப் 

பின்பற்றும் சமுதாயம் ஒப்பில்லாத சமுதாயமாக, உலகத்திற்குப் 

புதுமையான சமுதாயமாக விளங்கும் என்கின்றார் . இக்கொள்கையைப் 

பின்பற்றினால், ஒரு மனிதனின் உணவை இன்னொரு மனிதன் தட்டிப் 

பறிக்கும் வழக்கம் இருக்காது என்றும் ,ஒரு மனிதனைத் துன்பப்படுத்தித் 

தான் மட்டும் சுகமாக  வாழும் பழக்கம் இருக்காது என்றும் கூறுகின்றார் .


அழகிய சோலைகளாலும் நீண்ட  வயல்களாலும் சூழப்பட்ட  வளம் 

பொருந்திய நம் பாரத நாட்டில் கனிகளும், கிழங்குகளும், தானியங்களும் 

கணக்கின்றி கிடைக்கின்றன. எனவே, ஒரு மனிதனின் உணவை 

இன்னொரு மனிதன் பறித்து உண்ணும் வழக்கம் இனி வேண்டாம்  என்று 

கூறுகின்றார்.

 தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லாமல் வருந்தும் நிலை ஏற்படும் 

என்றால் இந்த உலகத்தினை அழித்திட வேண்டும் என்ற விதியைப் 

புதிதாக இயற்றுவோம். அதை எப்போதும் கடைபிடிப்போம் ” 

என்றுஆணையிடுகின்றார் .

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்பது கண்ணா பிரானின் 

கூற்று . எனவே சாதி, இனம், மதம்,பொருளாதாரம் ,உயர்ந்தவன்

,தாழ்ந்தவன் என்ற கட்டுப்பாடுகளை அறுத்தெறிய வேண்டும் என்று 

பாடுகின்றார் .

மக்கள் அனைவரும் அமைதியுடன் வாழ்வினை மேற்கொண்டு

இறைவனை அடைகின்ற வழியை இந்தியா இந்த உலகிற்கே கற்றுக் 

கொடுக்கும். ஏனெனில், இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமையைக் 

 காணும்  நாடு.  சாதி, மதம், இனம் என வெவ்வேறாக இருப்பினும் 

மனதளவில், இங்கு வாழும் மக்கள் அனைவரும்,ஒரு குலத்தைச் 

சேர்ந்தவர்கள் . ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள்.   எல்லோரும் சரி நிகர் 

சமானம்  என்று விளக்கி மக்களை நெறிப்படுதுகின்றார்  

அனைவருக்கும் ஒரு விலையே!என்று சமதர்மக் கொள்கையை அறிமுகம் 

செய்கின்றார். 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்