சிறப்புத்தமிழ் - இரட்சண்ய யாத்திரிகம் – H A கிருஷணப்பிள்ளை

 

        இரட்சண்ய யாத்திரிகம் – H A கிருஷணப்பிள்ளை

இரட்சணிய யாத்திரிகம் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களால் 

எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல் ஆகும். ஜான் பான்யன் (John Bunyan) என்பவர் 

ஆங்கிலத்தில் இயற்றிய The Pilgrim's Progress  என்ற  நூலைத் தழுவிச் 

செய்யுள் நடையில் எழுதப்பட்டது   ஆகும்.

இந்நூலில் பருவம் என்பது பெரும் பிரிவு, படலம் அப்பருவத்தினுள் 

அமையும் சிறுபிரிவு. இந்நூல் ஆதிபருவம், குமார பருவம், நிதான பருவம்

ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் என்னும் ஐந்து பருவங்களையும் 47 

படலங்களையும் உடையது. இந்நூல் 3622 பாடல்களையும் கொண்டுள்ளது

பாடல் 1

ஈண்டினியான் புகல்வதெவ னெம்பெருமான் றிருமேனி

தீண்டினார் சிலுவையொடு சேர்த்தினார் செங்கையிலுங்

காண்டகுசே வடியிலும்வெவ் விருப்பாணி கடாவினா

நீண்டசிலு வையையெடுத்து நிறுத்தினார் நீலங்கீண்டு.                               

பாடல் 2

மற்றிரண்டு திருடரையும் வலப்புறத்து மிடப்புறத்துஞ்

செற்றமொடு குருசேற்றிக் கொலைமாக்கள் செயலொழிய

சொற்றமறைத் திருவசனந் துலக்கமுறச் சுருதிமுதல்

குற்றவா ளிகளோடு நடுநின்றார் குருசுமிசை.          

பாடல் 3

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்

பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்

இன்னதென வறிகில்லார் தாஞ்செய்வ திவர்பிழையை

பொருள் விளக்கம் :

Ø  நம் இயேசு பிரான் ஆணிகள் அடிக்கப்பட்டதால்  உடல் சிதைவுற்று மனம் 

தவித்து சொல்ல முடியாத பல துன்பங்களையும் அடைந்தார்.  

Ø  எனினும் இவ்வாறு செய்த அவர்கள் மீது இரக்கம் கொண்டார் .

Ø  என் தந்தையே இவர்கள் தாம் செய்வது பாவச் செயல் என்பதை அறியாமல் 

செய்துவிட்டார்கள் . இவர்களை மன்னித்து விடுங்கள் என்று இறைவனிடம் 

வேண்டினார்.

Ø  இப்படிப்பட்ட பொறுமையும் மனத்தூய்மையும் பெற்றவர்கள் கிறித்தவர்கள் 

என்று சொல்வது இறந்து போனவர்களைத்  துஞ்சினார் என்று மங்கல 

வழக்காக கூறுவது போன்றதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்