சிறப்புத்தமிழ்- திருவாசகம் - மாணிக்கவாசகர் -வேண்டத்தக்கது அறிவோய் நீ

 

               திருவாசகம் - மாணிக்கவாசகர்

வேண்டத்தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்

வேண்டி நீயா தருள் செய்தாய்

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்

அதுவும் உன்றன் விருப்பன்றே

பொருள் விளக்கம் :-

எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் நீயே அறிவாய். நான் எதைக் 

கேட்டாலும் அருளும் கருணை வள்ளல் நீ. உன்னிடம் பல பொருள்களை 

வேண்டும் திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் அரியவன் நீ;  எனக்கு 

வேண்டியவற்றை கொடுத்து , நீயே என்னை ஏற்று அருளும் செய்தாய்

நானும் அதைத்தான் விரும்பினேன். இப்போது நான் வேண்டுவது ஏதாவது 

இருக்குமானால், அதுவும் உன்னுடைய விருப்பமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்