சிறப்புத்தமிழ் -யாதும் ஊரே யாவரும் கேளிர்-: கணியன் பூங்குன்றனார்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாடியவர் : கணியன் பூங்குன்றனார்
திணை :பொதுவியல்
துறை :பொருண்மொழிக்காஞ்சி
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல்
பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
பொருள் விளக்கம்
Ø அனைத்து ஊரும் நம் ஊரே அனைத்து
மக்களும் நமது உறவினர்களே.
Ø நன்மை தீமை அடுத்தவரால் வருவது அல்ல. நாம் செய்யும் செயலே நம்
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணம். .
Ø துன்பமும் ஆறுதலும் மற்றவர்கள் தருவதில்லை.. உன் துன்பத்துக்கு
காரணமும் அதற்கான
ஆறுதலும் நாமே .
Ø வாழ்க்கையில் இறப்பு ஒருநாள் அனைவருக்கும் வரும்.அது புதிதானது அல்ல
எனவே அதை
நினைத்து நினைத்து துன்பப்பட வேண்டாம்.
Ø வாழ்க்கையில் எனக்கு அனைத்தும் கிடைத்து விட்டது எனவே வாழ்க்கை
இனிமையானது என ஒரு போதும் எண்ணாதீர்கள்.
Ø பிறப்பையும் இறப்பையும் போல பகலும் இரவும் போல இன்ப துன்பமும்
உண்டு. எனவே எதிலும் அதிக மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.
Ø ஒருவனுக்கு துன்பம் மட்டுமே என்றும் துணையாக இருந்தது இல்லை.துன்பம்
மட்டுமே என் வாழ்க்கையாக இருக்கின்றது என்று வாழ்க்கையை வெறுத்து
ஒதுக்காதீர்கள்.
Ø வானம், மின்னலுடன் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண்
ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,
அதன் வழியிலே போகும் சிறு படகு போல, அரிய வாழ்க்கையானது முன்னர்
இட்ட முறைவழியே போகத் தான் என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள்
அனுபவத்தால் தெளிவு பெற்றோம். ஆகையால்
Ø நம்மை விட பெரிய இடத்தில் இருப்போரை நாம் உயர்வாக எண்ணத் தேவை
இல்லை .
Ø நம்மை விட சிரியவர்களை தாழ்வாக நினைக்க வேண்டாம் . இந்த குணம் தான்
வாழ்வில் கற்றவர்களுக்கு உரிய சிறந்த குணமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக