சிறப்புத்தமிழ்-கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே - ஒக்கூர் மாசாத்தியார்

 

                   புறநானூறு

 புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்டது.  

புறத்திணை சார்ந்த இந்நூல்  புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது 

எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் 

பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள்

அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. 

புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் 

மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. 

போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

 

    கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே - ஒக்கூர் மாசாத்தியார்

 

கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;

மூதில் மகளிர் ஆதல் தகுமே:

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,

யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,

பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;

இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,

வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,

ஒரு மகன் அல்லது இல்லோள்,

'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!

திணை- வாகை . வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும்

 வெற்றியின் அடையாளமான வாகைப்பூவைச் சூடி வெற்றியைக்

 கொண்டாடுதலைக் குறிக்கும்;

துறை- மூதில் முல்லை. மறவர்க்கு மட்டுமின்றி அந்த மறக்குடியில் வந்த

 மடப்பத்தினையுடைய மகளிர்க்கும் மறம் உண்டு என மிகுத்துக் கூறுவது

 மூதின் முல்லை எனப்படும். என்று புறப்பொருள் வெண்பாமாலை

 குறிப்பிடுகிறது.

பொருள் விளக்கம்  

Ø  நேற்றைக்கு முந்தைய நாள்  நடந்த போரில் இவளது அண்ணன் பகைவரின் 

யானையை வீழ்த்திய பின் போரில் போர்க்களத்திலேயே மாண்டான்.

Ø  நேற்று நடந்த போரில் இவளது கணவன் பகைவரின் அணிவகுப்பு பிளவு 

படும்படி விலக்கிக்கொண்டு முன்னேறி அங்கேயே மாண்டான்.

Ø  இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டவுடன் ஏதாவது செய்யவேண்டும் 

     என்னும் ஆவலுடன் எண்ணிப்பார்த்து, தன் ஒரே ஒரு மகனை, இளம் 

பிள்ளையை, பரந்துகிடந்த அவன் தலைமுடியை எண்ணெய் வைத்துச் சீவி 

முடித்து, வெண்ணிற ஆடையை உடுத்திவிட்டு, வேலைக் கையிலே

 கொடுத்துபோர்க்களம் நோக்கிச் செல்க” என்று கூறி அனுப்பிவைக்கிறாளே!

Ø   இவள் எண்ணம் கெட்டொழியட்டும். இவளது துணிவான செயல்

 கடுமையானது.

இவள் மூதில் மகளிருள் ஒருத்தியாக இருத்தல் வேண்டும்.இவளது

 கடுமையான எண்ணம் கெட்டொழியட்டும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்