சிறப்புத்தமிழ்- சீறாப்புராணம்- உமறுபுலவர்

               சீறாப்புராணம்- உமறுபுலவர்

 

 வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும்

மறை தெளிந்த மற்றை யோர்க்கும்

ஊனுடைய  பல்லுயிர்க்கும் உணர்வரிய 

பேரொளியாய்  ஓங்கி நின்ற

ஞானமெனும் பரம்பொருளே  அழியாத

பெரும் பேறே  நடுநின் ரென்றும்

ஊனமற்  வினையாடி எவ்விடத்தும்

எந்நாளும் உறையும் கோவே

பொருள் விளக்கம்: வானத்து தேவர்களும் தூதுவர்களும் திருக்குரானைத்  

தெளிவாய் கற்று தேர்ந்தவர்கள்.  உன்னுடைய பல உயிர்களும் 

உணர்வதற்கு அரியவனாக விளங்குபவனே. மிகுந்த ஒளியாய் ஓங்கி 

நின்றவனே, ஞானப் பரம்பொருளே அறியாத பெரும்  செல்வமே, நடுவு 

நிலைமையில் நிற்பவனே ,குற்றம் அற்ற முறையில் வினைகளை 

ஆராய்ந்து தருபவனே எல்லா இடங்களிலும் எப்போதும் வாழ்கின்ற 

அரசனே என இறைவனது  பெருமையைப்  பாராட்டுகின்றார் உமறுபுலவர்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்