பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

  

        

              பதினெண்கீழ்க்கணக்கு  நூல்கள்


சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் 

சேர்த்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று 

வழங்கலானது .

1. இன்னா நாற்பது

2. இனியவை நாற்பது

3. கார் நாற்பது

4. களவழி நாற்பது

5. ஐந்திணை ஐம்பது

6. ஐந்திணை எழுபது

7. திணைமொழி ஐம்பது

8. கைந்நிலை

9. திருக்குறள்

11. நான்மணிக்கடிகை

12. ஆசாரக்கோவை

13. திணைமாலை நூற்றைம்பது

14. பழமொழி நானூறு

15. சிறுபஞ்சமூலம்

16. முதுமொழிக்காஞ்சி

17. ஏலாதி

18. திரிகடுகம்


 அறநூல்கள் – 11    அகநூல்கள் – 6     புறநூல் – 1          


அறநூல்கள் – 11

நூல்கள் ஆசிரியர்கள்

நாலடியார் -சமணமுனிவர்கள்

நான்மணிக்கடிகை -விளம்பிநாகனார்

இன்னா நாற்பது -கபிலர்

இனியவை நாற்பது -பூதஞ்சேந்தனார்

திரிகடுகம் -நல்லாதனார்

ஆசாரக்கோவை -பெருவாயின்முள்ளியார்

பழமொழி- முன்றுரையரையனார்

சிறுபஞ்சமூலம்- காரியாசன்

ஏலாதி -கணிமேதாவியர்

திருக்குறள்- திருவள்ளுவர்

முதுமொழிக்காஞ்சி -கூடலூர் கிழார்

 

புறநூல் -1

நூல் ஆசிரியர்

களவழி நாற்பது- பொய்கையார்

அகநூல்கள் – 6

நூல்கள் ஆசிரியர்கள்

ஐந்திணை ஐம்பது- மாறன் பொறையனார்

ஐந்திணை எழுபது -மூவாதையார்

திணைமொழி ஐம்பது -கண்ணன் சேந்தனார்

கார் நாற்பது கண்ணன்- கூத்தனார்

திணைமாலை நூற்றைம்பது- கணிமேதாவியார்

ஐந்திணை அறுபது (அ) கைந்நிலை- புல்லங்காடனார்

அறநூல்கள் விளக்கம்:

1.நாலடியார் 

திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி 

நூலாகும்.இது ‘நாலடி நானூறு’ எனவும் 

அழைக்கப்படுகிறது.

திருக்குறள் போலவே அறத்துப்பால், பொருட்பால், 

காமத்துப்பால் என மூவகை பிரிவுகளுடையது.

அறத்துப்பால் 13.

பொருட்பால் 24.

காமத்துப்பால் 3

ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற 

பழமொழியில் வரும் நாலும் என்பது நாலடியாரையும் 

இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும்.

“செல்வம் சகட கால்போல் வரும்”

“கல்வி கரையில கற்பவர் நாள்சில”


2.நான்மணிக்கடிகை

கடிகை என்பதற்கு “துண்டு” எனப் பொருள்படும்.  நான்கு 

மணிகளின் துண்டுகள் இணைந்த மாலைபோல 

ஒவ்வொரு பாடலிலும் மணி போன்று நான்கு 

கருத்துகளுடன் பாடப்பெற்றுள்ளதால் இதனை 

“நான்மணிக்கடிகை” என அழைக்கப்படுகிறது.


3. இன்னா நாற்பது

ஒவ்வொரு கருத்து முடிவிலும் “இன்னா” எனக் 

கூறுப்படுவதால் “இன்னா நாற்பது” 

என்றழைக்கப்படுகிறது.

“ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல்

இன்னா”

“உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா”


4. இனியவை நாற்பது

இனிய பொருட்களை பாடல்களில் தொகுத்துக் 

கூறியுள்ளமையால் இப்பெயரைப் பெற்றுள்ளது.

“ஊனினைத் தின்று ஊனினைப் பெருக்காமை இனிது”

“மானம் அறிந்தபின் வாழாமை முன் இனிதே”


5. திரிகடுகம் (திரி + கடுகம்)

சுக்கு+மிளகு+திப்பிலி இம்மூன்றினால் செய்யப்பட்ட 

மருந்துக்கு “திரிகடுகம்” என்று பெயர்.

“காளாளன் என்பவன் கடன்படா வாழ்பவன்”

6. ஆசாரக் கோவை

ஆசாரம் என்பது ஒழுக்கம். கோவை என்பது அடுக்கிக் 

கூறுதல். ஒழுக்க நெறிகளைப் பற்றியும் நாள்தோறும் 

செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் 

குறிப்பிடுகிறது.


7. பழமொழி

பழமை + மொழி.இது  பழமொழி நானூறு 

என்றழைக்கப்படுகிறது. நீதிக் கருத்தை 

காட்டும் வகையில் அமைக்கப்பட்ட நூல். திருக்குறள், 

நாலடியார் நூல்களோடு ஒருங்கே வைத்து 

போற்றத்தக்க பெருமையுடையது.

“பாம்பின் கால் பாம்பறியும்”

“கண்டதைக் கற்க பண்டியதனாவான்”


8. சிறுபஞ்ச மூலம்

மூலம் என்பது வேர். பஞ்சம் என்பது ஐந்து. 

சிறுவழுதுணை, நெருஞ்சி,சிறுமல்லி, பெருமல்லி, 

கண்டங்கத்திரி ஆகிய ஐந்து சிறு வேர்கள் நோயைப் 

போக்கி உடலுக்கு உறுதி தருவது போல இந்நூலில் 

கூறப்பட்டுள்ளது.


 9. ஏலாதி


ஏலாதி என்பது மருத்துவப் பெயர்.ஏலம் + இலவங்கம் 

+ நாககேசரம் + சுக்கு + மிளகு + திப்பிலி ஆகிய 

ஆறுவகை மருந்து கலவையே “ஏலாதி” ஆகும்.


10. திருக்குறள்

திரு+குறள்.

அறத்துப்பால்-38

பொருட்பால் – 70

காமத்துப்பால் – 25

133 அதிகாரங்கள்

1330 குறள்களையும் 9 இயல்களையும் உடையது.


அறத்துப்பால் (4 இயல்கள்)


பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்


பொருட்பால்( 3 இயல்கள்)


அரசியல், அங்கவியல், ஒழிபியல்


காமத்துப்பால் 2 இயல்கள்


களவியல், கற்பியல்


11.முதுமொழிக் காஞ்சி

கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது எனக் 

கூறுகிறது.“ஆர்கலியுகத்து மக்கட்கெலாம் ஒதலில் 

சிறந்தன்று இருக்கும்”


புறநூல் விளக்கம்:


12.களவழி நாற்பது

ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் 

பெறுவது களவழி. இந்நூல் முழுவதும் யானைப் போர் 

பற்றியே அழகிய வீரக்கற்பனைகளைத் தருகிறது.


 

அகநூல்கள் விளக்கம்

13. கார் நாற்பது

அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு 

நூல்களில் சிறிய நூல். கார்காலத்தின் அழகிய 

முல்லை நிலத்தின் முதல், கரு, 

உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.

 


14. ஐந்திணை ஐம்பது


ஆசிரியர் பொறையனார். அகத்திணைகளான முல்லை, 

குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் 

திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள்

இடம்பெற்றுள்ளன..

“ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் 

சேராதார்” என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த 

பாயிரப்பாடல்  கூறுகிறது.


15. ஐந்திணை எழுபது

ஆசிரியர் மூவாதியார். ஒவ்வாரு திணைக்கும் 14 

பாடல்கள் வீதம் ஐந்து திணைக்குமாக 70 

அமைந்துள்ளன. இது  அகப்பொருட்டுறைகளை 



16. திணைமாலை நூற்றைம்பது

ஆசிரியர்  கணிமேதாவியார். 

இவரே எழுதியவர். ஒவ்வொரு திணைக்கும் 30 

பாடல்கள் வீதம் 150 பாடல்கள் 

அமைந்துள்ளன.அகத்தினை கருத்துக்கள் அமைந்த 

இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து 

வரும்.கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள்  நூல்களில் 

இதுவே பெரிய நூல் ஆகும்.


17. கைந்நிலை(ஐந்திணை அறுபது)


ஆசிரியர் புல்லங்காடனார். 

இதில் 12 முதல் 60 பாடல்கள் இடம் பெற்றுள்ளன..

இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.


18. திணைமொழி ஐம்பது

ஆசிரியர் கண்ணந் சேந்தனார். அகத்தினை ஐந்திற்கும் 

தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாக்களை அமைந்த 

நூல். ஆ தலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.



  

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்