சிறப்புத்தமிழ்- ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே-பொன்முடியார்

 

           ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;

திணை : வாகை

 துறை : மூதில்முல்லை.

பாடியவர் : பொன்முடியார்

 ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,

பொருள் விளக்கம் :

Ø  மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் தாயின் தலையாய கடமை. 

அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை.

Ø  அவனுக்குத் தேவையான வேல் போன்ற படைக் கருவிகளை உருவாக்கிக் 

கொடுத்தல் கொல்லரின் கடமை.

Ø  அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை.

Ø  ஒளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்தித் தடுத்தற்கரிய போரைச் 

செய்து, பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது 

அம்மகனின் கடமை என்கிறார் பொன்முடியார் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்