சிறப்புத்தமிழ் - நல்லதோர் வீணை- பாரதியார்

                             நல்லதோர் வீணை-  பாரதியார் 

நல்லதோர் வீணை செய்தே – அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ, – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

 சொல்லடி, சிவசக்தி – நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் – நித்தம்

 நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் – சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்

 அசைவறு மதிகேட்டேன் – இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

பொருள் விளக்கம் :

Ø  நல்ல அருமையான ஒரு வீணையை உருவாக்கி விட்டு அதனை

 பயன்படுத்தாது குப்பையில் எறிவது என்பது நியாயம் இல்லாத செயல்.

  அதுபோல சுடர்மிகு அறிவுடன் என்னை படைத்த சிவசக்தியே இந்த

 உலகத்திற்கு என் உழைப்பை தந்திட உறுதியான உடல் வேண்டும்.

  அறிவோடு வலிமை பொருந்திய உடலும் இருந்தால்தான் உலகத்திற்கு

 நன்மை செய்ய முடியும்.

Ø  ஆதலால் வேகத்துடன் செல்லும் பந்தினைப்போல் உள்ளம் விரும்பும்படி

 செயல்படுதல் வேண்டும்.

Ø  எந்த பொருளின் மீதும் விருப்பமில்லாத மனம் வேண்டும் புதிய புதிய

 சிந்தனைகளை வெளியிடும் உயிர் வேண்டும் .

Ø  உடல் தசையைத்  தீவைத்து சுட்டாலும் சிவசக்தியை பாடும் நல்ல உள்ளம்

 வேண்டும். 

சலனமற்ற அறிவு வேண்டும் இவை யாவற்றையும் அருள்வதில் உனக்கு எதுவும் 

தடையில்லையே  என சிவசக்தியிடம் வேண்டுகிறார் பாரதியார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்