சிறப்புத்தமிழ் - திருவாய் மொழி- நம்மாழ்வார்- உயர்வு அற உயர் நலம்
திருவாய் மொழி- நம்மாழ்வார்
உயர்வு
அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு , என் மனனே!
இங்கு நமாழ்வார் தனக்கே தன் உள்ளத்திற்கே தன் ஆன்மாவிற்கே
உபதேசிக்கின்றார்.
என் மனமே, தன்னைவிட உயர்வு உடையவர் நலம் உடையவர் யாரும்
இல்லை எனும் பெருமை உடையவர் திருமால். நம்முடைய
அறியாமையை நீக்கித் தெளிவான அறிவைத் தருபவர். தேவர்களின்
தலைவர். அத்தகைய பரம்பொருளாகிய திருமாலின் திருவடிகளைத்
தொழுது பிறவித் துன்பத்தைத் தீர்த்துக்கொண்டு அறியாமையில் இருந்து
மீண்டு எழுவாயாக. இறைவனின் ஒளிமயமான திருவடி அறியாமை
இருளை அகற்றும் என்ற தத்துவத்தை இப்பாடல் மூலம் தெரிவிக்கின்றார்
நம்மாழ்வார்.
கருத்துகள்
கருத்துரையிடுக