குறுந்தொகை – பரணர்- பாவடி உரல பகுவாய் வள்ளை
குறுந்தொகை – பரணர்- பாவடி உரல பகுவாய் வள்ளை
நிலம்: மருதம்
கூற்று: தோழி கூற்று
பாடியவர்: பரணர்.
கூற்று -1: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே
சொல்லுவாளாய்ச்
சொல்லியது.
கூற்று – 2: தலைமகற்குப் பாங்காயினோர் கேட்பச் சொல்லி வாயில்
மறுத்ததூஉம்
ஆம்.
பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய
நல்லியற் பாவை அன்னஇம்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.
உரை:
பெரிய அணிகலன்களை அணிந்த சேர மன்னனது, மிகுந்த அச்சத்தைத்
தரும் கொல்லிமலையில், கரிய கண்களையுடைய தெய்வமாகிய
கொல்லிப்பாவை, அம்மலையின் மேற்குப் பக்கத்தில் சிலையாக
வைக்கப்பட்டுள்ளது. நல்ல அழகுடைய அந்தக் கொல்லிப்பாவையை
ஒத்த, மெல்லிய இயல்பையுடைய தலைவி, பரந்த
அடிப்பாகத்தையுடைய உரலின் திறந்த வாயில் நெல்லை இட்டுக்
குற்றும்போது, வள்ளைப் பாட்டில் தலைவனுடைய பெயரைக் கூறிக்
குற்றுவாளாயின், அதைக் கேட்ட இந்த ஊரில் உள்ள தொடர்பில்லாத
மக்கள் பழிச்சொற்களை சொன்னாலும் சொல்லக்கூடும். அறிவில்லாத
இந்த ஊர் மக்களின் சொற்களுக்காக நாம் ஏன் வருந்த வேண்டும்?
கருத்துகள்
கருத்துரையிடுக