கண்ணோட்டம்-திருக்குறள்
கண்ணோட்டம்
1.
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ்
வுலகு.
பொருள்: இந்த
உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம்
எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.
2.
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப்
பொறை.
பொருள்: அன்புடன்
அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச்
சுமையாவார்கள்.
3.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத
கண்.
பொருள்: இரக்க
உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி
வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன்
தராதவையாகும்.
4.
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத
கண்.
பொருள்: அகத்தில்
அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல்
தோன்றுவதைத் தவிர,
வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.
5.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப்
படும்.
பொருள்: கருணையுள்ளம்
கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்.
6.
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா
தவர்.
பொருள்: ஒருவர்க்குக்
கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர்
மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.
7.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும்
இல்.
பொருள்: கருணை
மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர்
கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
8.
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ்
வுலகு.
பொருள்: கடமை
தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக
இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.
9.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே
தலை.
பொருள்: அழிக்க
நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.
10. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு
பவர்.
பொருள்: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு
கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக