குறுந்தொகை 88. குறிஞ்சி ஒலி வெள் அருவி

 

                          குறுந்தொகை    88. குறிஞ்சி ஒலி வெள் அருவி

திணை : மருதம்

பாடியவர் : மதுரைக் கதக்கண்ணன்

கூற்று :இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச்

சொல்லியது.

ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,

சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்

தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல்,

நடு நாள் வருதலும் வரூஉம்;

வடு நாணலமே-தோழி!-நாமே.

பொருள்:

ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய, உயர்ந்த மலைகளுள்ள 

நாட்டையுடைய தலைவன்சிறிய கண்ணையுடைய பெரிய களிறு

வலியையுடைய புலியை எதிர்த்துப் பொருது, தனது பழைய வலிமையை 

இழந்து நிற்கும் . மக்கள் செல்லுவதற்கு அரிய மலைச் சாரலின் வழியே

தலைவன் இரவில் வருகின்றான் .  அங்ஙனம் அவன் வருவதனால் நமக்கு 

உண்டாகும் பழிக்கு நாம் நாணேம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்