நடவுப் பாட்டு - கடிய நடவும் பெண்ணே

 

                                                               நடவுப் பாட்டு

 

தொழிற்பாடல்கள் நாட்டுப்புற மக்களால் வேலை செய்யும் போது

களைப்பு தெரியாமல் இருக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவன.

அத்தொழிற் பாடல்களுள் வேளாண் தொழிற் பாடல்கள் விதை விதைத்து,

நீர்பாய்ச்சி, களையெடுத்து, கதிர் அறுத்து, போரடித்து, வண்டியில் ஏற்றி

சொல்லும் வரை பல வளர்ச்சிப் படிகள் உள்ளன. அவ்வளர்ச்சிப் படிகள்

முக்கியமானது நடவுப் பாட்டாகும். நாற்று நடவின்போது நாட்டுப்புறப்

பெண்களால் காலங்காலமாக இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.

 

கடிய நடவும் பெண்ணே – உன்

கால் அழகைப் பார்ப்போம்

வீசி நடவும் பெண்ணே – உன்

விரல் அழகைப் பார்ப்போம்

சாஞ்சி நடவும் பெண்ணே – உன்

சாயல் நடை பார்ப்போம்

நான் முன்னே நடந்தாலும்

என் அன்ன நடை போமா

நான் சாஞ்சி நடந்தாலும்

சாயல் நடை போமா

அசைஞ்சீ நடந்தாலும் – என்

அன்ன நடை போமா

என் விரலழகுக் கேத்த

வீரனல்ல போடா

என் அன்ன நடைக்கேத்த 

ஆணல்ல போடா

என் பெண்ணு நடைக்கேத்த

புருஷனல்ல போடா

 

2

முன்னேர் மாட்டுக்கு என்தோழிக் காளைகளே

என்னஎன்ன அடையாளம் என்தோழிக் காளைகளே

நெத்தியிலே நெத்திச் சுட்டி என்தோழிக் காளைகளே

நெடுவாலு பூவாலு என்தோழிக் காளைகளே

பின்னேர் மாட்டுக்கு என்தோழிக் காளைகளே

என்ன என்ன அடையாளம் என்தோழிக் காளைகளே

கொம்பிலே கொப்பி கட்டி என்தோழிக் காளைகளே

கொளம்பிலே  லாடம் தைச்சி என்தோழிக் காளைகளே

நுகத்தடியை நானெடுத்து என்தோழிக் காளைகளே

பூட்டினேன் பொலிஎருதை என்தோழிக் காளைகளே

பூட்டினேன் பொலிஎருதை என்தோழிக் காளைகளே

ஒட்டினேன் முன்னேரு என்தோழிக் காளைகளே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்