ந.பிச்சமூர்த்தி - காதல்
ந.பிச்சமூர்த்தி - காதல்
பெயர் வேங்கட
மகாலிங்கம்
பெற்றோர் நடேச
தீட்சிதர் - காமாட்சியம்மாள்
பிறப்பு 8.11.1900
இறப்பு 4.12.1976
பிச்சமூர்த்தி
அவர்கள் கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும்
கல்லூரிப்
படிப்பையும் நிறைவு செய்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று,
சென்னை சட்டக்
கல்லூதிரயில் பட்டம பெற்றார். 1925 முதுல் 1938 வரை
வழக்கறிஞராகப்
பணிபுரிந்தார். 1989 முதல் 1959 வரை இந்து
அறநிலையத்துறை
அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
நவஇந்தியா இதழில்
சில காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துகள்
சுதேசமித்திரன், சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற
இதழ்களில்
வெளிவரத்
தொடங்கின.
இந்துத் தத்துவ
மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது
படைப்பு
மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. “இலக்கியமும்
நம்மைப் போல
நம்மையறியாமலே – ஒருவேளை நம்மையும் மீறி –
உந்தித்தள்ளும்சக்தி
அல்லதுஎதுவோ… ”என நம்பினார். இந்த
நம்பிக்கையின்
சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள்
வெளிப்பட்டன.
பதினெட்டாம்பெருக்கு, மோகினி, மாங்காய்த் தலை,காபூலிக்
குழந்தைகள்,
விஜயதசமி ஆகிய
சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
பிச்சமூர்த்தி, ஸ்ரீராமானுஜர்
என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார்
வேடமேற்று
நடித்திருக்கிறார்.
ரமண மகரிஷி
மற்றும் சித்தர் குழந்தைசாமியும் இவரை இல்லறமே
பொருத்தம் என்ற
போதிலும் சந்நியாசத்தில் நாட்டம் கொண்டு
விளங்கினார்
காதல் என்னும்
தலைப்பில் இன்னொரு கவிதையும் படைத்திருக்கிறார்
பிச்சமூர்த்தி.
காதலியாகத் தம்மைக் கற்பனை செய்து கொண்டு பாடிய
கவிதை.
காதல்
எண்ணாத நாள்
ஒன்றில்
வந்தார் –
கோடை மழைபோல்
காட்டாற்று
வெள்ளம்போல்
வீடெங்கும்
குப்பைகூளம்
எங்கிலும் கந்தல்
துணிகள்
முகம் எங்கிலும்
வேர்வை
கைஎங்கும் சமையல்
மணம்
எங்கும் இல்லநெடி
சிறு புகைச்சல்,
ஒட்டடை
வேளை பார்த்தா
நாதர் வந்தார்?
அசடானேன்.
கேட்பது அல்ல
காதல்
தருவதுதான் என்று
தரையில்
அமர்ந்தார்
என்னைக் காணேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக