இன்று நான் பெரிய பெண் - அ.சங்கரி

                    இன்று நான் பெரிய பெண்   -  அ.சங்கரி


 

நான்

கல்லாய் மாறிய பூ

பாறையாய் இறுகிய காற்று

பனியாய் உறைந்த நீர்

பூவைப் போலவும்

காற்றைப் போலவும்

நீரைப் போலவும்

குதித்துத் திரிந்து

சுற்றிய பருவத்தில்

காலை உதைத்து

வீரிட்டு அழவும்

கல கல என்று

கைதட்டிச் சிரிக்கவும்

கோபம் வந்தால்

கொப்பியைக் கிழிக்கவும்

முடிந்த காலம்.

மரத்தில் ஏறவும்

மாங்காய் பிடுங்கவும்

பக்கத்து வீட்டுப்

பிள்ளைகளுடனே

கிட்டி அடிக்கவும்

ஒளித்துப் பிடிக்கவும்

ஒன்றும் பேசிலர் எவரும்.

இன்று

நான் பெரிய பெண்

உரத்துச் சிரித்தல் கூடாது

விரித்த புகையிலை

அடக்கம்; பொறுமை

நாணம்

பெண்மையின் அணிகலம்

கதைத்தல்; சிரித்தல்

பார்த்தல்; நடத்தல்;

உடுத்தல்

எல்லாம் இன்னபடி என்றெழுதி….

நான்

கல்லாய்

பாறையாய்

பனியாய்

பெண்ணாய்…..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்