தமிழ்விடு தூது - சீர்கொண்ட

 

 

                    தமிழ்விடு தூது

 

தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் 

எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் 

கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் 

துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் 

தூது அனுப்பியதாக அமைந்துள்ளது.

இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். 

அதாவது சோமசுந்தரக் கடவுள்.

 தூது விடுவோர் ஒரு பெண். 

தூது செல்லும் பொருள் தமிழ்மொழி. 

இந்த நூல் 268 கண்ணிகளைக் 

கொண்டுள்ளது. 

இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் 

பெயர் தெரியவில்லை.


 பாடல் 

 

1.    சீர்கொண்ட கூடற் சிவராச தானிபுரந்

தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண்

     

2.    டிசையுந் தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு

விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே

     

3.    செய்யசிவ ஞானத் திரளேட்டி லோரேடு

கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற்

     

4.    கூடல் புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்

பாடலறி வித்த படைவேளும் - வீடகலா

     

5.    மன்னுமூ வாண்டில் வடகலையுந் தென்கலையும்

அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே

             

6.    மூன்றுவிழி யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்

ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால்

     

7.    தேடிமுடி யாவடியைத் தேடாதே நல்லூரிற்

பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி

     

8.    மட்டோலைப் பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்

பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே

     

9.    ஒல்காப் பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்

தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் - மல்காச்சொற்சையில்லை.

 

10.         பாத்திரங்கொண் டேபதிபாற் பாய்பசு வைப்பன்னிரண்டு

சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம்

 

11.         தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்

ஆதி முனிவ ரனைவோருஞ் - சாதியுறும்

 

12.         தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு

மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் - செந்தமிழிற்

 

13.         பொய்யடிமை யில்லாப் புலவரென்று நாவலர்சொல்

மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்

 

14.         காடவருஞ் செஞ்சொற் கழறிற் றறிவாரும்

பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாவருங்

 

15.         கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்

எல்லாரு நீயா யிருந்தமையாற் - சொல்லாரும்

 

16.         என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்

பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் -

 பொருள் 

1.   கூடல் என்னும் மதுரையை காத்து ஆண்டவரும் தமிழ்ச் சங்கப் புலவராக 

இருந்தவரும் ஆகிய சிவபெருமான் 

2.  பல திசைகளில் சென்று தனது 

வெற்றியை நிலைநாட்டிய 

பெண்ணரசியாம் மீனாட்சி என்னும் 

தடாதகைப் பிராட்டியும்

3.  ஒருமுறை சிவாகமப் பொருளை சிவன் 

பார்வதியாருக்குக் கற்றுக் கொடுக்கும் 

போது பார்வதி பாராமுகமாக இருந்தார். 

அதனால் வெகுண்ட சிவன் பார்வதியை 

வலைஞர்(மீனவர்) மகளாகப் பிறக்கும்படி 

சபித்தார்.தன் தாய் பார்வதியின் 

துன்பத்திற்குக் காரணமான  அந்தச் 

சிவாகமத் தொகுதியை விநாயகர் 

கடலில் எறியக் கையில் எடுத்த  

பாசம் மிக்க அந்த விநாயரும்,

4.  மதுரைச் சங்கப் புலவர்கள் முன் 

உருத்திரசன்மனாகத் தோன்றி தமிழ் 

நூலின்  சிறப்பை உரைத்த வேல் 

படையை உடைய முருகப் பெருமானும்,

5.  பார்வதி தேவி ஊட்டிய அமுதத்தால் 

மூன்று வயதில் வடமொழி மற்றும் 

தென்மொழி நூல்களைக் கற்றுணர்ந்த 

திருஞானசம்பந்தரும்,

6.  மூன்று வருடங்களுக்கு 

முன்னால் முதலை உண்ட சிறுவனை 

சிவபெருமானிடம் பதிகம்  பாடிப் பெற்ற 

சுந்தரரும்,

7.  பிரமனாலும் திருமாலாலும் காண 

முடியாத இறைவனடியைத்

 திருநல்லூரில்  பாடல் பாடி தன் 

தலையில்  தாங்கும் பேறு 

பெற்ற திருநாவுக்கரசரும்,

8.  பொய்யுரைத்ததனால் தாழம்பூவைச் 

சூடாதவராகிய சிவபெருமானைத் தம் 

திருக்கோவை என்னும் நூலை 

பட்டோலையில் எழுதிக் கொள்ளச் செய்த 

மாணிக்கவாசகரும்,

9.  இயல், இசை, நாடகம் என்ற 

முத்தமிழின் இலக்கணத்தை இயற்றிய 

அகத்திய முனிவரும்,

தொல்காப்பியம்  உரைத்த தொல்காப்பியரும்,

10. உயிர்களைனத்தும் இறை வழியில்  

சேருவதற்கு  12 நூற்பாக்களால் 

சிவஞானபோதம் என்ற நூலை இயற்றிய 

மெய்கண்ட தேவரும்,

12. குற்றமில்லாத பாடல்களைக் 

கொடுத்தருளிய திருவிசைப்பாவைப் 

பாடிய திருமாளிகைத் தேவர் முதலிய 

முனிவர்களும்,

13. உயிர்களைச் சேரும் வினைகளை 

அகற்ற திருமந்திரம் அளித்த திருமூலரும்,

14. பொய்யும் அடிமைத்தனமும் அற்ற 

புலவரெனப் போற்றப்படும் நக்கீரர் 

முதலான சங்கப் புலவர்களும்,

15. ஐயடிகள் காடவர்கோனும்,

16. செம்மையான சொற்களை உடைய 

கழற்றறிவாரும்,

17. தெய்வமொழிப் பாவலரான 

திருவள்ளுவரும்,எல்லோருமாக தமிழே 

இருந்தது. எனவேதான் அவர்கள் 

தமிழுருவம்   பெற்றனர்.

கல்லாதவர்க்குச் சிங்கமெனத் தமிழ் 

விளங்கியது.

நூற்பாவைக் கொண்டு முடித்த 

தூய்மையுடையவரும், இருவிழிகளாகிய

குற்றமில்லாத கவிதை பாடும் 

திருமாளிகைத் தேவர் முதலிய முனிவர்

யாவரும், குலத்தாலும் உற்ற 

சூழ்ச்சியாலும் நீங்காத உயிர்களைச் 

சாரும் வினைகளையெல்லாம் தாம் 

சாற்றிய மந்திரம் என்ற நூலினால் 

நீக்கிய வல்லவரும், செந்தமிழிற் 

பொய்யடிமையில்லாத புலவரென்று 

புலவர்களாற்புகழ்ந்து கூறப்பட்ட 

உண்மைத் தொண்டராகிய சங்கப் 

புலவர்களும், ஐயடிகள் காடவர்கோன் 

என்பவரும், செம்மையான (திருத்தமான) 

சொற்களையுடைய கழறிற்றறிவார் 

என்பவரும், பாடுவதற்கு அருமையான 

தெய்வ மொழிப்பாவலரும், ஆராய்தற்கு 

அருமையான கல்லாத மூடர்கட்குச் 

சிங்கம் போன்றகல்வி கேள்வியிற்

 சிறந்த எல்லாரும் நீயாயிருந்தமையால் 

புகழ் நிறைந்த எனக்கு வாய்த்த 

தெய்வமே உன்னை க்கண்டு துதித்தால் 

என் குறைகள் எல்லாம் நீங்கும் என்று

கருதி நின் பொன் போன்ற 

திருவடிகளையே  புகலாகக் கொண்டு 

போற்றுகின்றேன்.

     

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்