பாரதிதாசன் - ஒற்றுமைப்பாட்டு

 

                                                        பாரதிதாசன்

பெற்றோர்:                                கனகசபை முதலியர், இலக்குமி அம்மையார்

பிறப்பு:                                         29.4.1891, புதுவை

இறப்பு:                                        21.4.2964

மனைவி:                                   பழநி அம்மையார்

 

சுப்புரத்தினம் என்ற தனது பெயரை பாரதியின் மேலுள்ள பற்ல் பாரதிதாசன் 

என்று அமைத்துகொண்டார். இளங்கலை தமிழ் பயின்று 

பல்கலைக்கழகத்தின் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று காரைக்காலில் 

உள்ள அரசு கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

தனது நண்பரின் திருமணத்தில் ஒரு பாடலைப் பாட, அங்கு வந்திருந்த 

பாரதியாரின் அறிமுகம் இவருக்குக் கிடைத்து. அப்பாடலை சுதேசமித்திரன் 

இதழில் பாரதியார் வெளியிட்டார். 

1954 ஆம் ஆண்டு புதுவை சட்டமன்ற தேர்தலில் நின்று தனது முதுல் 

தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிறகு பெரியாரின் 

கொள்கைகளில் ஆர்வம் நிறைந்த அவர் தனது பாடல்களின் மூலம் கடவுள் 

மறுப்பு, சாதி மறுப்பு மற்றும் மத எதிர்ப்பு போன்ற பெரியாரின் 

கொள்கைகளைத் தழுவி பாடல்களை எழுதியுள்ளார்.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் கண்டழுதுவோன், கிறுக்கன்

கிண்டல்காரன், பாரதிதாசன் என்ற பல புனை பெயர்களில் எழுதி வந்தார்.

பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இசை அமுகு

எதிர்பாராத முத்தம் உட்பட 86 நூல்களை இயற்றியுள்ளார்.

29.7.1946 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் புரட்சிக்கவி என்று 

பாராட்டப்பட்டு ரூ.25000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இவருடைய 

பிசிராந்தையார் என்ற நாடக நூல் 1970 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி 

விருதைப் பெற்றது, இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் 

பொது உடைமையாக்கப்பட்டன.


 

                                   ஒற்றுமைப்பாட்டு

(ஆனந்தக் களிப்பு மெட்டு)

மக்கள் நலத்துக்கு மதமா? அன்றி

மதத்தின் நலத்துக்கு மக்களா சொல்வீர் ! (மக்கள்)

திக்கெட்டும் உள்ளவர் யாரும் ஒன்று

சேராது செய்வதே மதமாகும் ஆனால்

பொய்க்கட்டு நீக்குதல் வேண்டும் அப்

பொல்லாங்கில் எல்லாரும் நீங்குதல் வேண்டும்

அக்கட்சி எம்மதத்தாரும் இங்(கு)

()கெல்லாம் உறவினர் என்றெண்ண வேண்டும் (மக்கள்)

எல்லா மதங்களும் ஒன்றே அவை

எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்றே

சொல்லால் முழங்குவது கண்டீர் அவை

துன்புற்று வாழ்ந்திடச் சொல்லியதும் உண்டோ

எல்லோரும் மக்களே யாவர் இங்(கு)

() கெல்லாரும் நிகராவர் எல்லாரும் உறவோர்

எல்லாரும் ஒரு தாயின் செல்வர் இதை

எண்ணாத மக்களை மாக்களென் போமே (மக்கள்)

வழிகாட்டும் மதமெல்லாம் இகே நல் வழிகாட்டி யானபின் வழிகாட்டிடாமல்

பழிகூட்ட வைத்திருப்பீரோ? நீர்

பகைகூட்ட மதமென்ற மொழி கூட்டலாமோ?

பிழியாக் கரும்பினிற் சாற்றை நீர்

பெற்றபின் சக்கையை மக்கட்களித்தே

அழிவைப் புரிந்திடுதல் நன்றோ? நல்

அன்பால் வளர்த்திடுக இன்ப நல்வாழ்வை (மக்கள்)

பொருள் :

    மதம் என்பது மக்களின் நலத்திற்காக உருவானதா  அல்லது 

மதத்தின் நலனிற்காக மக்கள் செயல்பட வேண்டுமா என்பதைச் சிந்தித்து 

செயல்பட வேண்டும் வேண்டும்.  அனைத்துத் திசையிலும்  உள்ள மக்கள் 

எல்லோரையும் ஒன்று சேர்க்கக் கூடிய ஆயுதமாக மதங்கள் செயல்பட 

வேண்டும். ஆனால்  அவை அவ்வாறு செயல்படுவதில்லை.  அவ்வாறு 

ஒன்று சேர்க்காத மதங்களின் பெயரால் கூறப்படும் பொய்ச் செய்திகளலில் 

இருந்தும், பொல்லாங்கான செயல்களில் இருந்தும் , மதங்களிலிருந்தும் 

மக்கள் விடுபட வேண்டும்.

   எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பினும், எந்த மதத்தைச் 

சார்ந்தவராக இருப்பினும் அவர்கள் யாவரும் நம் உறவினர்களே என்ற 

எண்ணத்துடன்  வாழ வேண்டும்.

    மக்கள் யாவரும் இன்பமுடன்  வாழ வேண்டும் என்பதைத்தான் 

அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. மக்களோடு வேற்றுமை 

பாராட்டித் துன்பபப்படுத்தி  வாழ வேண்டும் என்று எம்மதமும் 

கூறவில்லை.  

     இந்தப் பூமியில் வாழ்கின்ற யாவரும், மக்கள் இனம் என்ற ஒரே 

இனத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு அனைவரும் ஒருவர்க்கொருவர் 

நிகரானவர்கள் . எல்லோரும் உறவினர்கள் .எல்லோரும் பாரதத்தாயின் 

செல்வங்கள் .இதை உணராத மக்களை ஐந்தறிவு உடைய 

விலங்குகளுக்குச் சமமாக நினைக்க வேண்டும்.

 

     மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்ட மதங்கள் எல்லாம்

நல்வழியைக் காட்டாமல், பிற மதத்தின்மீது  பழி உண்டாக்கவே முனைப்பு 

காட்டுகின்றன . ஒரு மதத்தைச் சேர்ந்த மக்கள் பிற மதங்களைச் சேர்ந்த 

மக்களைப் பகைவர்களாக வேண்டாதவர்களாக கருதும் செயலுக்கு துணை 

நிற்ககக் கூடாது.

    மதங்கள் கூறிய நன்மை தரும் வழிகளை  நன்குக் கற்றுக் கொண்ட 

மதத்தலைவர்கள் அந்த நல்ல  கருத்துகளை மக்களுக்குக் கூறாமல்

வேற்றுமையை உருவாக்கும் கருத்துகளைக் கூறித் தவறான  வழியினைக் 

காட்டுவது  நன்மை தரும் செயல் ஆகாது . இச் செயல் கரும்புச் சாற்றின் 

இனிமையான சுவையைத்  தான் மட்டும் பெற்றுக் கொண்டு,  வெறும் 

கரும்புச் சக்கையை  மக்களுக்கு அளிப்பது போன்றதாகும்.

 

     அன்பே மக்களை ஒன்று சேர்க்கும் கருவி . ஆகவே

மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுவதைத் தவிர்த்து, மதங்கள் 

வலியுறுத்தும் நல்லனவற்றை  மட்டும் பின்பற்றி அன்புடன் வாழ   

வேண்டும் என்கிறார் ஆசிரியர் .



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்