கடவுள் வாழ்த்து - thirukkural - திருக்குறள்
கடவுள் வாழ்த்து - thirukkural - திருக்குறள்
1.அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி-
பகவன்
முதற்றே, உலகு.
பொருள் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
அதுபோல் உலகம் கடவுளை
அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
2.கற்றதனால்
ஆய பயன் என்கொல்-வால்-அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின்?.
பொருள் : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத்
தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
3.மலர்மிசை
ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
பொருள் : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை
இடைவிடாமல்
நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
4.வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்க்கு எப்போதும்
எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
5.இருள்
சேர் இரு வினையும் சேரா, இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு.
பொருள் : கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம்,
அறியாமையால் விளையும் இருவகை
வினையும் சேர்வதில்லை.
6.பொறி
வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.
பொருள் : ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய
பொய்யற்ற ஒழுக்க நெறியில்
நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
7.தனக்கு
உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
மனக் கவலை மாற்றல் அரிது.
பொருள் : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு
மனக்கவலையை மாற்ற முடியாது.
8.அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு
அல்லால்,
பிற ஆழி நீந்தல் அரிது.
பொருள் : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக்
கடக்க முடியாது
9.கோள்
இல் பொறியில் குணம் இலவே-எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பொருள் : கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய
கடவுளின் திருவடிகளை
வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
10.பிறவிப்
பெருங் கடல் நீந்துவர்; நீந்தார்,
இறைவன் அடி சேராதார்.
பொருள் : இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய
பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக