வான் சிறப்பு - திருக்குறள் - 21-30
வான்
சிறப்பு - திருக்குறள் - 11-20
11. வான்
நின்று உலகம் வழங்கி வருதலான்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.
பொருள் : மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும்
உயிர்களுக்கு
அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.
12. துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத்
துப்பு ஆயதூஉம் மழை.
பொருள் :உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு,
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக
இருப்பது மழையாகும்.
13. விண் இன்று பொய்ப்பின், விரிநீர்
வியன் உலகத்து-
உள் நின்று உடற்றும் பசி.
பொருள் :மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக
இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
14. ஏரின் உழாஅர் உழவர், புயல்
என்னும்
வாரி வளம் குன்றிக்கால்.
பொருள் : மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உணவுப் பொருள்களை
உண்டாக்கும் உழவரும்
ஏர்கொண்டு உழ மாட்டார்.
15 கெடுப்பதூஉம்,
கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.
பொருள் :பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம்
கெட்டு
நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
16. விசும்பின்
துளி வீழின் அல்லால், மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது.
பொருள் : வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில்
ஓரறிவுயிராகிய பசும்புல்லின்
தலையையும் காண முடியாது.
17. நெடுங்
கடலும் தன் நீர்மை குன்றும், தடிந்து எழிலி-
தான் நல்காது ஆகிவிடின்.
பொருள் :மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல்
விடுமானால், பெரிய
கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
18. சிறப்பொடு பூசனை செல்லாது-வானம்
வறக்குமேல், வானோர்க்கும், ஈண்டு.
பொருள் :மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும்
திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
19. தானம்
தவம் இரண்டும் தங்கா, வியன் உலகம்
வானம் வழங்காது எனின்.
பொருள் :மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச்
செய்யும் தானமும், தம்
பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.
20. நீர்
இன்று அமையாது உலகுஎனின், யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.
பொருள் :எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால்,
மழை
இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
கருத்துகள்
கருத்துரையிடுக