பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இலக்கிய வரலாறு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இலக்கிய வரலாறு
- அறநூல்கள் - 11
- அகநூல்கள் - 6
- புறநூல் - 1
அறநூல்கள் - 11
|
நூல் |
ஆசிரியர் |
|
நாலடியார் |
சமணமுனிவர்கள் |
|
நான்மணிக்கடிகை |
விளம்பிநாகனார் |
|
இன்னா
நாற்பது |
கபிலர் |
|
இனியவை
நாற்பது |
பூதஞ்சேந்தனார் |
|
திரிகடுகம் |
நல்லாதனார் |
|
ஆசாரக்கோவை |
பெருவாயின்முள்ளியார் |
|
பழமொழி |
முன்றுரையரையனார் |
|
சிறுபஞ்சமூலம் |
காரியாசன் |
|
ஏலாதி |
கணிமேதாவியர் |
|
திருக்குறள் |
திருவள்ளுவர் |
|
முதுமொழிக்காஞ்சி |
கூடலூர்
கிழார் |
புறநூல்
-1
|
களவழி நாற்பது |
பொய்கையார் |
அகநூல் - 6
|
ஐந்திணை ஐம்பது |
மாறன்
பொறையனார் |
|
ஐந்திணை
எழுபது |
மூவாதையார் |
|
திணைமொழி
ஐம்பது |
கண்ணன்
சேந்தனார் |
|
கார்
நாற்பது |
கண்ணன்
கூத்தனார் |
|
திணைமாலை
நூற்றைம்பது |
கணிமேதாவியார் |
|
ஐந்திணை
அறுபது (அ) கைந்நிலை |
புல்லங்காடனார் |
1.அறநூல்கள் விளக்கம்
1.நாலடியார்
திருக்குறளுக்கு
அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.இது ‘நாலடி நானூறு’ எனவும்
அழைக்கப்படுகிறது. சமணமுனிவர்களளால் இயற்றப்பட்டது .
வேளாண் வேதம் என்ற பெயரும்
உண்டு. நாலடி
நானூறு எனவும் பெயர் பெறும்
திருக்குறள் போலவே அறத்துப்பால், பொருட்பால்,
காமத்துப்பால் என மூவகை பிரிவுகளுடையது.
அறத்துப்பால் 13.
பொருட்பால் 24.
காமத்துப்பால் 3
ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியில் வரும்
நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும்
குறிப்பதாகும்.
“செல்வம் சகட கால்போல் வரும்”
“கல்வி கரையில கற்பவர் நாள்சில”
2.நான்மணிக்கடிகை
விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல்
நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது . ஒவ்வொரு
பாடலும் நான்கு அடிகளால் ஆனது. இந் நூற்
பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள்
சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை
என்று அழைக்கப்படுகிறது.இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன. கடிகை என்பதற்கு “துண்டு” ,ஆபரணம் எனப் பொருள்படும்.
3. இன்னா நாற்பது
ஒவ்வொரு கருத்து முடிவிலும் “இன்னா” எனக் கூறுப்படுவதால் “இன்னா
நாற்பது” என்றழைக்கப்படுகிறது. கபிலர்
என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக்
கொண்டது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்..
இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் நூற்று அறுபத்து நான்கு கூடாச்
செயல்கள் கூறப்பட்டுள்ளன.
“ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா”
“உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா”
4. இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது.
இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. உலகில் நல்ல அல்லது இனிமையான செயல்களைப் எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி
புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல செயல்களை எடுத்துக்
கூறுகின்றது. இனிய பொருட்களை பாடல்களில்
தொகுத்துக் கூறியுள்ளமையால்
இப்பெயரைப் பெற்றுள்ளது.
“ஊனினைத் தின்று ஊனினைப் பெருக்காமை இனிது”
“மானம் அறிந்தபின் வாழாமை முன் இனிதே”
5. திரிகடுகம் (திரி + கடுகம்)
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம்
என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி
என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும்
கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை
செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101
வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். சுக்கு+மிளகு+திப்பிலி
இம்மூன்றினால் செய்யப்பட்ட மருந்துக்கு “திரிகடுகம்” என்று பெயர்.
“காளாளன் என்பவன் கடன்படா வாழ்பவன்”
6. ஆசாரக் கோவை
மனித
வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை.. வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின்
முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.
பல்வேறு
வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு செயல் தொடர்பான
ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
ஆசாரம் என்பது
ஒழுக்கம். கோவை என்பது அடுக்கி அல்லது கோர்த்துக் கூறுதல். ஒழுக்க நெறிகளைப்
பற்றியும் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும்குறிப்பிடுகிறது.
7. பழமொழி
பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும்
சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். இது முன்றுறையர்
அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு
பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற
பெயர் பெற்றுள்ளது. பழமை
+ மொழி.இது பழமொழி நானூறு என்றழைக்கப்படுகிறது. நீதிக் கருத்தை விளக்கிக் காட்டும்
வகையில் அமைக்கப்பட்ட நூல். திருக்குறள்,
நாலடியார் நூல்களோடு ஒருங்கே வைத்து போற்றத்தக்க பெருமையுடையது.
“பாம்பின் கால் பாம்பறியும்”
“கண்டதைக் கற்க பண்டியதனாவான்”
8. சிறுபஞ்ச மூலம்
மூலம் என்பது வேர். பஞ்சம் என்பது ஐந்து. சிறுவழுதுணை, நெருஞ்சி,
சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி
ஆகிய ஐந்து சிறு வேர்கள் நோயைப் போக்கி உடலுக்கு உறுதி தருவது போல இந்நூலில்
கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு
பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை
எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை.
எனினும், இது
சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.
9. ஏலாதி
ஏலாதி சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார்
என்பவரால் எழுதப்பட்டது. திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை
இயற்றியவரும் இவரே. ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன ஏலாதி என்பது மருத்துவப் பெயர்.ஏலம் + இலவங்கம் +
நாககேசரம்
சுக்கு + மிளகு + திப்பிலி ஆகியஆறுவகை மருந்து கலவையே “ஏலாதி”
ஆகும்.
10. திருக்குறள்
உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல
பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது திரு+குறள்.
அரத்துப்பால்-38,பொருட்பால் – 70,காமத்துப்பால் – 25 enaஎன மூன்று பிரிவுகளை உடையது
.
133 அதிகாரங்கள்,1330 குறள்களையும் 9 இயல்களையும் உடையது.
{அறத்துப்பால் (4 இயல்கள்)
பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
பொருட்பால்( 3 இயல்கள்)
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
காமத்துப்பால் 2 இயல்கள்
களவியல், கற்பியல்}
11.முதுமொழிக் காஞ்சி
மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி.
முதுமொழி என்பது பழமொழிஎன்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது எனக்
கூறுவதிலிருந்து தொடங்குகிறது .
“ஆர்கலியுகத்து மக்கட்கெலாம் ஒதலில் சிறந்தன்று இருக்கும்”
புறநூல்
விளக்கம்
12.களவழி நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள
நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது. சோழ மன்னனான
கோச்செங்கணானுக்கும், சேரமான்
கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில்
எழுதப்பட்டது இந் நூல். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேர
மன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை
விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது. ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்
பெறுவது களவழி.
அகநூல்கள்
விளக்கம்
13. கார் நாற்பது
தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர்
சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக்
கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள்
சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களில் சிறிய நூல். கார் காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.
முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் இதில் சித்தரிக்கப்படுகின்றது.
முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள்
அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.
14. ஐந்திணை ஐம்பது
அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை
ஐம்பது. இதை எழுதியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். ஆசிரியர் பொறையனார். அகத்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம்,
பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் திணைக்குப்
பத்துப் பாடலாக 50 பாடல்கள்
இடம்பெற்றுள்ளன. “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின்
ஓதாதார் செந்தமிழ் சேராதார்” என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல்
கூறுகிறது.
15. ஐந்திணை எழுபது
ஆசிரியர் மூவாதியார். அகப்பொருள்
சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். இவ்வைந்து திணைகளையும்
பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது
பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.ஒவ்வாரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து திணைக்குமாக
70 அமைந்துள்ளன. இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த
நூலாகும்.
16. திணைமாலை நூற்றைம்பது
ஆசிரியர்
கணிமேதாவியார். இவரே எழுதியவர். ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன. அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில்
வடசொற்களும் சில கலந்து வரும். கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள் நூல்களில் இதுவே
பெரிய நூல் ஆகும்.
17. கைந்நிலை(ஐந்திணை அறுபது)
ஆசிரியர் புல்லங்காடனார். இதில் 12
முதல் 60 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.. இதற்கு
ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும்
புலவர். கை என்றால் ஒழுக்கம்.ஆகவே,ஐந்திணை
ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் இந்நூலின் பெயர் கைந்நிலை என
அமைந்துள்ளது.இந்நூலில் ஆசை,பாசம்,கேசம், இரசம்,இடபம்,உத்தரம் போன்ற வடசொற்கள்
கலந்து காணப்படுகின்றன இதிலும்
வடசொற்கள் பல கலந்துள்ளன.
18. திணைமொழி ஐம்பது.
ஆசிரியர் கண்ணந் சேந்தனார். அகத்தினை ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல்
வீதம் 50 வெண்பாக்களை கொண்ட நூலாததலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது..
திணைமொழியைம்பதினை இயற்றிய கண்ணன் சேந்தனார் சாத்தந்தையார் என்ற பெரியாரின் மகன்
ஆவர்இதில்
அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை
கருத்துகள்
கருத்துரையிடுக