பத்துப்பாட்டு இலக்கிய வரலாறு

 

                                          பத்துப்பாட்டு இலக்கிய வரலாறு 

 பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் நூல்களின் தொகுப்புகளுள் 

ஒன்றாகும். பத்துப்பாட்டுஎட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்.

 இவற்றுள் திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படைசிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படைமுல்லைப்பாட்டுமதுரைக் காஞ்சிநெடுநல்வாடைகுறிஞ்சிப் பாட்டு

பட்டினப் பாலைமலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என 

வழங்கப்படுகிறது.

 இவை அனைத்தும் ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும்இவை ஒன்றுக்கொன்று 

தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. இந்த 

அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய

கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

என வரும் பாடல்பத்துப் பாட்டு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.

இவற்றுள் மிகச் சிறியது  103 அடிகளைக் கொண்டமைந்த முல்லைப் பாட்டாகும் , மிகப்

பெரியது  782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சியாகும் .

 திருமுருகாற்றுப்படை

·       நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை.

·       மதுரையைச் சேர்ந்த நக்கீரன் புலவரால் இது இயற்றப்பட்டது..

·       முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட 

ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.

·       "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" 

   வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் 

பொருள்படும்..

·       இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை என்பதாகும்.இதன் சிறப்புக் கருதி இந்நூலினை

    சைவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.

  ·       பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல்  

    நூலாக       வைத்து  எண்ணப்படுகிறது.

·       திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான்

   பெயரில்       அமைந்துள்ளது.

பொருநராற்றுப்படை

·       இந்நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக்  

    கொண்டு      இயற்றப்பட்டது.

·       முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர்.

·       இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவாலானது.

·       இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.

சிறுபாணாற்றுப்படை

·       நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படைஎனும் இந்நூல்.

·       இது 269 அடிகளாலமைந்தது.ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத்

    தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்.

·       அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு

    பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பெரும்பாணாற்றுப்படை

·       500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை.

·       பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத்

  தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த நூல்.  

·       கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவரால்  அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல்.

முல்லைப் பாட்டு

·       பத்துப்பாட்டுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே.

·       103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது.

·       பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப்

   பட்டதாகக் கருதப்படினும்தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

·       நப்பூதனார் என்னும் புலவரால்  பாடப்பட்டது முல்லைப்பாட்டு. இதுநெஞ்சாற்றுப்படை  

   எனவும்  அழைக்கப்படுகிறது.

மதுரைக் காஞ்சி.

·       இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இது.

·       மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார்.

·       இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல்

   உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது..

·       பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக்

    கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும்

    திவசங்கள் விதைத்ததையும் பாடுவர்.

·       மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழ்படுவதையும்   பாடுகிறார்.

நெடுநல்வாடை

·       தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத்

   தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே

   நெடுநல்வாடை என்னும் நூல்.,

·       தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட நெடு வாடையாகவும்போர்

   வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே

   இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக்

   கூறுவர்.

·       நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால்  

   சுட்டப்பட்டுள்ளது.

·       ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப்  

   பொருள் நூலாயிற்று.

குறிஞ்சிப் பாட்டு.

·       கபிலர் என்னும் புலவர் பாடிய இந்நூல்  261 அடிகளாலானது .

·       ஆரிய அரசன் பிரகத்தன் என்பாருக்குத் தமிழின் பெருமை உணர்த்த வேண்டி

  ஆசிரியப்பாவினால் இந்நூல் பாடப்பெற்றது.

·       இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு.அவ் அரசன் தமிழர்தம் காதல்

  ஒழுக்கத்தை அறிந்துகொள்ள,குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல்

 நிமித்தமும் குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது.

 

பட்டினப்பாலை

·       பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும்

    புலவரே இதனையும் இயற்றியுள்ளார்.

·       பண்டைய சோழ நாட்டின் சிறப்புசோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின்

    சிறப்பு,அதன் செல்வ வளம்கரிகாலனுடைய வீரச்செயல்கள்மக்கள் வாழ்க்கை முறை

   ஆகியவற்றை எடுத்து இயம்பும் இந்நூல் 301 அடிகளால் அமைந்துள்ளது.

·       இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார்  

   புலவர்..

·       கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே  

பட்டினப்பாலை.

மலைபடுகடாம்

·       பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது.

·       583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர்இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப்

   பெருங்கௌசிகனார் என்னும் புலவர் ஆவார்.

·       இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

·       நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு

  பாடப்பட்டது இந்நூல்.

 

புறப்பொருள் பற்றிய நூல்கள்:

 

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பொரும்பாணாற்றுப்படை

மலைபடுகடாம்

மதுரைக்காஞ்சி

அகப்பொருள் பற்றிய நூல்கள்:

குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை

முல்லைப்பாட்டு

அகப்பொருள்புறப்பொருள் பற்றிய நூல்கள்:

 

நெடுநல்வாடை

 

ஆற்றுப்படை நூல்கள்

 

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

மலைபடுகடாம்

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்