குறுந்தொகை - 88. குறிஞ்சி - தோழி கூற்று

 

குறுந்தொகை - 88. குறிஞ்சி - தோழி கூற்று

 

பாடியவர் : மதுரைக் கதக்கண்ணனார்.


திணை : குறிஞ்சித்  திணை


கூற்று    : தோழி கூற்று  (“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்:  


இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)

 

ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்


சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்


தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்


நடுநாள் வருதலும் வரூஉம்


வடுநா ணலமே தோழி நாமே.    

  

பொருள் : தோழி! ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த


மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன் சிறிய கண்ணையுடைய பெரிய


களிறு வலிமையையுடைய புலியை எதிர்த்துப் போர் செய்து  தனது 


பழைய வலிமை  சோர்தற்கிடமாகிய மக்கள் செல்ல இயலாத மலைச் 


சாரலின் வழியேநாடு இரவில்  வருதலையும் செய்வான்; அங்ஙனம் அவன் 


வருதலினால்நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாணோம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்