பரிபாடல் 5 செவ்வேள் பாய் இரும் பனிக்
பரிபாடல் 5 செவ்வேள்
பாடியவர்
: கடுவன்
இளவெயினனார்
இசையமைத்தவர் :: கண்ணனாகனார்
பண் :: பாலையாழ்
“பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப்
புக்கு,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை!
பொருள்:
கடலின்கண் பாறைகள் துகள்படும்படி பிணிமுகம்
என்னும் யானையிலேறிச் சென்று, தீப்பந்தம் போன்ற வேற்படையாலே
சூரபன்மனாகிய மாமரத்தை வேரோடு வெட்டி வீழ்த்தியவன் .புண்ணியம்
செய்தவர், பாவம் செய்தவர் என்னும் இருவகையினரில் புண்ணியம்
செய்தவர் என்னும் பெயரைப் பெயரளவில் மட்டுமே பெற்று, பிற
உயிரினங்களைக் கொன்று உண்பதையே வழக்கமாகக் கொண்டு இருந்த ,
மாய அரக்கர்களின் குலத்தை வேரோடு அழித்த வேல். நாவலந்தீவினுள்
வடபகுதியிலுள்ள கிரௌஞ்சம்
என்னும் மலையை உடைத்து அதன் ஊடே
வழியுண்டாக்கியவன்
ஆறுமுகங்களையுடைய முருகப்பெருமான் .
கருத்துகள்
கருத்துரையிடுக