குறுந்தொகை - 46. ஆம்பற் பூவின் சாம்ப லன்ன

 குறுந்தொகை - ஆம்பற் பூவின் சாம்ப லன்ன­- மாமலாடனார்.

 

மருதம் - தலைவி கூற்று

திணை - மருதம்

கூற்று - தலைவி கூற்று

பாடியவர் -  மாமலாடனார்.

 

ஆம்பற் பூவின் சாம்ப லன்ன


கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ


முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து


எருவினுண் தாது குடைவன ஆடி


இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்


புன்கண் மாலையும் புலம்பும்


இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.

 

உரை: தோழிஇங்கேவாடிய ஆம்பல் போல் குவிந்த 


சிறகுகளையுடையவீட்டின்கண் தங்கும் குருவிகள்முற்றத்தில் உலருந் 


தானியங்களைத் தின்றுபொதுவிடத்தில் உள்ள சாணத்தின் நுண்ணிய 


பொடியைக் குடைந்து விளையாடி,  வீட்டிலுள்ள இடத்தில் தம்முடைய 


குஞ்சுகளோடு மாலைநேரத்தில் தங்கியிருக்கின்றன. இதுபோல்பிரிந்து 


வாழ்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைப் 


பொழுதும்தனிமையும்தலைவர் சென்ற நாட்டில்இல்லையோ?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்