புறநானூறு 182. உண்டாலம்ம இவ்வுலகம்!-கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

 

      புறநானூறு 182. உண்டாலம்ம இவ்வுலகம்!  


பாடியவர்:  கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி


திணை:  பொதுவியல். (எல்லாத் திணைகளுக்கும் பொதுவான


செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.)


துறை: பொருண்மொழிக் காஞ்சி . (உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப்


பொருள்களை எடுத்துக் கூறுதல்.)

 

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்


அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்


தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;


துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்


புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்


உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;


அன்ன மாட்சி அனைய ராகித்


தமக்கென முயலா நோன்தாள்


பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.


பொருள் : இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது


என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்;


சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் 


தாமும்  அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும்


கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும்


ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய


சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய


முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம்


இயங்கிக்கொண்டிருக்கிறது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்