நற்றிணை - 15.முழங்கு திரை கொழீஇய
நற்றிணை
- 15.
பாடியவர்
:
அறிவுடைநம்பி
திணை
: நெய்தல்
கூற்று
: வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.
பாடல்:
முழங்கு
திரை கொழீஇய மூரி எக்கர்,
நுணங்கு
துகில் நுடக்கம் போல, கணம் கொள
ஊதை
தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
பூவின்
அன்ன நலம் புதிது உண்டு,
நீ
புணர்ந்தனையேம் அன்மையின்,
யாமே 5
நேர்புடை
நெஞ்சம் தாங்கத் தாங்கி,
மாசு
இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய்
வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும்
எம்மொடு வந்த
நாணும்
விட்டேம்; அலர்க, இவ் ஊரே! 10
பொருள் :
முழங்குகின்ற
அலைகொணர்ந்து சேர்ப்பித்த பெரிய எக்கர் மணலை மென்மையான
துகிலின்
அசைவு போலத் தோன்றுமாறு மிகுதி படக் காற்று வீசும் ; அத்தகைய நீர்மிக்க
வலிய
கடற்கரைத் தலைவனே! ; பூப்போன்ற எமது தலைவியின் நலத்தைப்
புதுவதாக
நுகர்ந்த
பின்னும் உன்னைச் சேர்ந்து உன்னுடையவர்களாய் ஆனோம் இல்லை . எனவே
நாங்கள்
நினக்கு உடம்படுதலையுடைய எம்முள்ளத்தில்
வருத்தமுற்று அவ்வருத்ததைத்
தாங்கினோம் . குற்றமற்ற
கற்பினையுடைய அறிவற்ற ஒருத்தி தன் குழந்தையைப் பேய்
வாங்கிக்கொள்ள
அவள் அதனைக் கைவிட்டாற்போல;
முன்னாளின் முதற்கொண்டு
எம்முடன்
வளர்ந்துவந்த நாணும் விட்டு விட்டோம் . இவ்வூரில் இனி இதுகுறித்து அலர்
எழுவதாக;
கூற்று
விளக்கம்: களவின்கண் ஒழுகிய தலைவன் மணம் செய்து கொள்ளாது காலம்
தாழ்த்த
அவனை நோக்கி நீ தலைவியின் நலத்தைப் உண்டனை எனினும் உன்னைச்
சேர்ந்தவர்கள்
அல்லர் ஆனோம் . அதனால் அலர் உண்டாயிற்று
எங்கள் நாணமும்
அழிகின்றது
எனக் கூறியது.
கருத்துகள்
கருத்துரையிடுக