நற்றிணை - 13. எழாஅஆகலின் எழில்

 

 

              நற்றிணை - 13. எழாஅஆகலின்  எழில்

பாடியவர் : கபிலர்  

திணை : குறிஞ்சி

கூற்று : இயற்கைப் புணர்ச்சியின் பிற்றை ஞான்று தலைவியின் வேறுபாடு கண்ட தோழி

தலைவி மறைத்ததற்குச்சொல்லியது.

பாடல் :

எழாஅஆகலின், எழில் நலம் தொலைய

அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-

ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த

பகழி அன்ன சேயரி மழைக் கண்,

நல்ல பெருந் தோளோயே! கொல்லன்      5

எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்

வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி

மயில் அறிபு அறியாமன்னோ;

பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.


பொருள் : தினைப் புனங்காவலையுடைய மழவர் தின்றழிக்க வந்த பன்றி முதலாய

விலங்குகளை அம்பை எய்து கொன்று மீட்டும் அவற்றினின்று பறித்தெடுத்த அம்பு போன்ற,

செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்ணையும், நல்ல பெரிய தோளையும் உடையாய்!;

கொல்லனது உலைக்களத்து அடிக்கும் இரும்பின் பொறி சிதறுமாறு போலச் சிறிய

பலகாயையுடைய வேங்கையின் மலர்கள் உதிர்கின்ற; உயர்ந்த மலையினுள்ள கூட்டிலிருக்கும்

மயில்கள் அறியாது என்று கருதிக்கொண்டு  பசிய புறத்தினையுடைய கிளிகள்  நெருங்கிய

தினைக் கதிர்களைக் கவர்ந்து போகும் . அதனால் அக்கதிர்களும் அழிந்துபோகின்றன காண்;

எழா அய்! அவற்றை ஓட்டவேண்டிய நீ இவ்விடத்திருந்தும் எழுந்தாயல்லை! அங்ஙனம்

எழாதிருப்பினும் நின் அழகிய நலமெல்லாங் கெடும்படியாக அயலாரிருக்கும் இவ்விடத்து

அழாதிருத்தலையேனுஞ் செய்வாயாக!;


கூற்று விளக்கம்: இயற்கைப் புணர்ச்சியின் மறுநாள் தலைவியின் கண் சிவப்பு முதலாகிய

வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு எதனால் ஆயிற்று என்று வினாவிய தோழிக்கு மறைத்து

கூடுதலான அவள் தினைக கதிரை கிளிகள் கொய்து கொண்டு போகவும் அவற்றை ஓட்ட நீ

எழுந்தாய் இல்லை இனி அழாதேனும் இரு எனறு கூறுவாள் போன்று இறைச்சியால் அவளது

களவொழுக்கத்தைத்  தான் அறிந்து கொண்டமையை பொருள் கொள்ளுமாறு தானும்

மறைத்துக்  கூறுவது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்